Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Aathirathil thudupeduthaai
Avasarathil padagu vittaai
Kaatrinilae sikki kondaal
Enna varum en uyire

Female : Aathirathil thudupeduthaai
Avasarathil padagu vittaai
Kaatrinilae sikki kondaal
Enna varum en uyire

Female : En kanner thaan angaeyum
Kaaval varum en uyire
En kanner thaan angaeyum
Kaaval varum en uyire

Female : Paathirathin niram polae
Paalin niram maaruvadhoo
Nethirathai maranthu vittu
Nee engae vaaduvadhoo

Female : Kodaiyilae mara nizhalum
Kobathilae kaadhaliyum
Aarudhalai tharavillaiyael
Yaar tharuvaar ennuyirae

Female : Aathirathil thudupeduthaai
Avasarathil padagu vittaai
Kaatrinilae sikki kondaal
Enna varum en uyire

Female : Vilakinilae neruppu vaithaal
Veedellaam oliyirukkum
Manadhinilae neruppu vaithaal
Vaithavarai erikaadho

Female : Sathiyathai maranthu vittal
Thani vazhiyae poga varum
Than vazhiyae ponaalum
Thalai vidhi thaan kooda varum

Female : Kattilennai niruthi vittu
Kaadhavazhi selgindraai
Kadhavazhi sendraalum
Kadhal vazhi maravadhae

Female : Unnidathil aasaiyilae
Nalla vazhi naan uraithen
Ennai nee maranthaalum
Sonna mozhi maravadhae
Maravadhae maravadhae

Female : Aathirathil thudupeduthaai
Avasarathil padagu vittaai
Kaatrinilae sikki kondaal
Enna varum en uyire

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசை ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்
அவசரத்தில் படகு விட்டாய்
காற்றினிலே சிக்கிக் கொண்டால்
என்ன வரும் என் உயிரே…

பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்
அவசரத்தில் படகு விட்டாய்
காற்றினிலே சிக்கிக் கொண்டால்
என்ன வரும் என் உயிரே…

பெண் : என் கண்ணீர்தான் அங்கேயும்
காவல் வரும் என் உயிரே
கண்ணீர்தான் அங்கேயும்
காவல் வரும் என் உயிரே

பெண் : பாத்திரத்தின் நிறம் போலே
பாலின் நிறம் மாறுவதோ
நேத்திரத்தை மறந்து விட்டு
நீ எங்கே வாடுவதோ

பெண் : கோடையிலே மர நிழலும்
கோபத்திலே காதலியும்
ஆறுதலைத் தரவில்லையேல்
யார் தருவார் என்னுயிரே

பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்
அவசரத்தில் படகு விட்டாய்
காற்றினிலே சிக்கிக் கொண்டால்
என்ன வரும் என் உயிரே..

பெண் : விளக்கினிலே நெருப்பு வைத்தால்
வீடெல்லாம் ஒளியிருக்கும்
மனதினிலே நெருப்பு வைத்தால்
வைத்தவரை எரிக்காதோ

பெண் : சத்தியத்தை மறந்து விட்டால்
தனி வழியே போக வரும்
தன் வழியே போனாலும்
தலைவிதிதான் கூட வரும்

பெண் : காட்டிலென்னை நிறுத்தி விட்டு
காதவழி செல்கின்றாய்
காதவழி சென்றாலும்
காதல் வழி மறவாதே

பெண் : உன்னிடத்தில் ஆசையிலே
நல்ல வழி நானுரைத்தேன்
என்னை நீ மறந்தாலும்
சொன்ன மொழி மறவாதே
மறவாதே.. மறவாதே..

பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்
அவசரத்தில் படகு விட்டாய்
காற்றினிலே சிக்கிக் கொண்டால்
என்ன வரும் என் உயிரே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here