Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : Viswanathan – Ramamoorthy

Male : Aathoram manal eduthu
Azhagazhagai veedu katti
Thottamittu chedi valarthu
Jooraaga kudi irundhom

Female : Aathoram manal eduthu
Azhagazhagai veedu katti
Thottamittu chedi valarthu
Jooraaga kudi irundhom

Male : Kudi irundha manal veedu
Mazhaiyinilae karaindhadhamma
Kondu vandha aasai ellam
Vandha vazhi sendrathamma
Aval irundha manadhinilae
Irul irundhu vattudhamma

Female : Sangathilae thamizh vaangi
Thangathilae ezhudhi veithen
Gangaiyilae padagu vittu
Kaadhalilae midhandhu vandhen
Paadhaiyilae pirithu vittu
Padagu mattum sendrathamma

Both : Aathoram manal eduthu
Azhagazhagai veedu katti
Thottamittu chedi valarthu
Jooraaga kudi irundhom

Male : Pathu viral modhiramaam
Pavazha mani maalaigalaam
Ethanaiyo kanavugalaam
Evvalavoo aasaigalaam
Athanaiyum maraindhadhamma
Aasai nilaa erindhadhamma

Female : Kalyanam oorvalamaam
Katcheri virundhugalaam
Oor muzhudhum thirunaalaam
Ulagam engum mananaalaam
Ulagathilae naangu kangal
Urangaamal vizhikuthammaa

Both : Aathoram manal eduthu
Azhagazhagai veedu katti
Thottamittu chedi valarthu
Jooraaga kudi irundhom

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம்

பெண் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம்

ஆண் : குடியிருந்த மணல் வீடு
மழையினிலே கரைந்ததம்மா
கொண்டு வந்த ஆசை எல்லாம்
வந்த வழி சென்றதம்மா
அவள் இருந்த மனதினிலே
இருள் இருந்து வாட்டுதம்மா

பெண் : சங்கத்திலே தமிழ் வாங்கி
தங்கத்திலே எழுதி வைத்தேன்
கங்கையிலே படகு விட்டு
காதலிலே மிதந்து வந்தேன்
பாதியிலே பிரித்து விட்டு
படகு மட்டும் சென்றதம்மா

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம்

ஆண் : பத்து விரல் மோதிரமாம்
பவழ மணி மாலைகளாம்
எத்தனையோ கனவுகளாம்
எவ்வளவோ ஆசைகளாம்
அத்தனையும் மறைந்ததம்மா
ஆசை நிலா எரிந்ததம்மா

பெண் : கல்யாணம் ஊர்வலமாம்
கச்சேரி விருந்துகளாம்
ஊர் முழுதும் திருநாளாம்
உலகமெங்கும் மணநாளாம்
உலகத்திலே நான்கு கண்கள்
உறங்காமல் விழிக்குதம்மா

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here