Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Aaththoram vedha vedhachchu andraadadam neer erachchi
Aaththoram vedha vedhachchu andraadadam neer erachchi
Ava kaaththirunthaa ava kan vizhichchaa
Ava kaalamellaam kanavu kandaa kannammaa
Ava kaavalukku oru niyaayamillai
Verum kanneerthaan michcham aachchu chinnammaa

Male : Sevalukkum kozhikkumthaan sonthamillae
Kozhi peththa kunjukkumaa banthamilae
Naalu kunjum naalu vazhi ponapinnae
Ada yaarai nambi vaazhuvathu kooru kannae

Male : Aaththoram vedha vedhachchu andraadadam neer erachchi
Ava kaaththirunthaa ava kan vizhichchaa
Ava kaalamellaam kanavu kandaa kannammaa

Male : Thaai nenachcha nenappilae oru nokkam undu
Thattu ketta pillaikellaam enna undu
Kandathellaam kaatchi aachchu ulagaththilae
Ada kattupaadu udainju pochchu idhayaththilae

Male : Maanam kettu sela vaangi kattanumaa
Madhiyum kettu soru vaangi unnanumaa
Naanam kettu bhoomiyilae nadakkanumaa
Ada naalum kettu uyirai vachchu vaazhanumaa

Male : Aaththoram vedha vedhachchu andraadadam neer erachchi
Ava kaaththirunthaa ava kan vizhichchaa
Ava kaalamellaam kanavu kandaa kannammaa
Ava kaavalukku oru niyaayamillai
Verum kanneerthaan michcham aachchu chinnammaa

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆத்தோரம் வெத வெதச்சு அன்றாடம் நீர் எறச்சி
ஆத்தோரம் வெத வெதச்சு அன்றாடம் நீர் எறச்சி
அவ காத்திருந்தா அவ கண் விழிச்சா
அவ காலமெல்லாம் கனவு கண்டா கண்ணம்மா
அவ காவலுக்கு ஒரு நியாயமில்லை
வெறும் கண்ணீர்தான் மிச்சம் ஆச்சு சின்னம்மா

ஆண் : சேவலுக்கும் கோழிக்கும்தான் சொந்தமில்லே
கோழி பெத்த குஞ்சுக்குமா பந்தமில்லே
நாலு குஞ்சும் நாலு வழி போனபின்னே
அட யாரை நம்பி வாழுவது கூறு கண்ணே

ஆண் : ஆத்தோரம் வெத வெதச்சு அன்றாடம் நீர் எறச்சி
அவ காத்திருந்தா அவ கண் விழிச்சா
அவ காலமெல்லாம் கனவு கண்டா கண்ணம்மா

ஆண் : தாய் நெனச்ச நெனப்பிலே ஒரு நோக்கம் உண்டு
தட்டுக் கெட்ட பிள்ளைக்கெல்லாம் என்ன உண்டு
கண்டதெல்லாம் காட்சி ஆச்சு உலகத்திலே
அட கட்டுப்பாடு உடைஞ்சு போச்சு இதயத்திலே…

ஆண் : மானம் கெட்டு சேல வாங்கி கட்டணுமா
மதியும் கெட்டு சோறு வாங்கி உண்ணனுமா
நாணம் கெட்டு பூமியிலே நடக்கணுமா
அட நாலும் கெட்டு உயிரை வச்சு வாழணுமா

ஆண் : ஆத்தோரம் வெத வெதச்சு அன்றாடம் நீர் எறச்சி
அவ காத்திருந்தா அவ கண் விழிச்சா
அவ காலமெல்லாம் கனவு கண்டா கண்ணம்மா
அவ காவலுக்கு ஒரு நியாயமில்லை
வெறும் கண்ணீர்தான் மிச்சம் ஆச்சு சின்னம்மா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here