Singers : K. Jamunarani, Trichy Loganathan, A. G. Rathnamala and V. T. Rajagopalan

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Aathukkullae oothu vetti
Aathukkullae oothu vetti
Aasaiyaga thanni mondu
Aasaiyaga thanni mondu
Naethu nee sonna sollu
Allaelae kuyilae
Nenjukullae inikkudhadi
Allaelae kuyilae

Female : Thumbai malar vaetti katti
Thumbai malar vaetti katti
Thoorathilae nee vandhaalum
Thoorathilae nee vandhaalum
Maarazhagai paakkum podhum
Kannadi karupae
Anja mugam minnudhaiya
Kannadi karupae

Male : Kumbakonam kolunthu vethala
Chappathi pazhamae enakku
Konjam kooda sevakalaiyae
Chappathi pazhame
Kumbakonam kolunthu vethala
Chappathi pazhamae enakku
Konjam kooda sevakalaiyae
Chappathi pazhame

Female : Thanjaavooru kadhambha poovum
Sippaayi mavanae enakku
Thanimaiyilae manakaliyae
Sippayi mavanae
Thanjaavooru kadhambha poovum
Sippaayi mavanae enakku
Thanimaiyilae manakaliyae
Sippayi mavanae

Male : Oda kara mann eduthu
Un uruvam senju vechen
Ragasiyatha pesamalae
Allaelae kuyilae
Raa pagala thookamillae
Allaelae kuyilae

Female : Mookuthi nathu nee enakku
Muthu pallakku naan unakku
Mookuthi nathu nee enakku
Muthu pallakku naan unakku
Enna mosam panni pogathinga
Sippaayi mavanae
Naan moozhgiduven thanniyila
Sippaayi mavanae

Male : Thookanaththaan koodu polae
Nee mudicha kondaiyilae
Puthiya pari koduthu
Allaelae kuyilae
Raa pagala thookamillae
Allaelae kuyilae
Pithu kondu nikkirenadi
Allaela kuyilae

Female : Savuku mara neelam polae
Saami nee valanthathalae
Etti vandhu maalai poda
Kannadi karupae
En valathi podhadhaiyaa
Kannadi karupae

Male : Ettadi kuchi pottukkalam
Izhuthu ullae pootikalam
Ettadi kuchi pottukkalam
Izhuthu ullae pootikalam
Ketti manjala poosikkodi
Chappathi pazhame
Endhan kitta kundhi pesikkodi
Chappathi pazhame

Female : Velli molachi ponaalum
Vidiya kaalam aanalum
En saedhi solli
Maaladhaiya
Sippaayi mavanae
Saettaigalum ooyadhaiyaa
Sippaayi mavanae

Male : Aathukkullae oothu vetti
Aasaiyaga thanni mondu
Naethu nee sonna sollu
Allaelae kuyilae
Nenjukullae inikkudhadi

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி, திருச்சி லோகநாதன் .ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் வி. டி. ராஜகோபாலன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

ஆண் : ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி
ஆசையாக தண்ணி மொண்டு
ஆசையாக தண்ணி மொண்டு
நேத்து நீ சொன்ன சொல்லு
அல்லேலக் குயிலே
நெஞ்சுக்குள்ளே இனிக்குதடி
அல்லேலக் குயிலே

பெண் : தும்பை மலர் வேட்டி கட்டி
தும்பை மலர் வேட்டி கட்டி
தூரத்திலே நீ வந்தாலும்
தூரத்திலே நீ வந்தாலும்
மாரழகை பாக்கும் போதும்
கண்ணாடிக் கருப்பே
அஞ்சா முகம் மின்னுதையா
கண்ணாடிக் கருப்பே

ஆண் : கும்பகோணம் கொழுந்து வெத்தல
சப்பாத்திப் பழமே எனக்கு
கொஞ்சம் கூட செவக்கலையே
சப்பாத்திப் பழமே
கும்பகோணம் கொழுந்து வெத்தல
சப்பாத்திப் பழமே எனக்கு
கொஞ்சம் கூட செவக்கலையே
சப்பாத்திப் பழமே

பெண் : தஞ்சாவூரு கதம்ப பூவும்
சிப்பாயி மவனே எனக்கு
தனிமையிலே மணக்கலியே
சிப்பாயி மவனே
தஞ்சாவூரு கதம்ப பூவும்
சிப்பாயி மவனே எனக்கு
தனிமையிலே மணக்கலியே
சிப்பாயி மவனே

ஆண் : ஓடக் கர மண்ணெடுத்து
உன் உருவம் செஞ்சு வச்சேன்
ரகசியத்த பேசாமலே
அல்லேலக் குயிலே
ராப் பகலா தூக்கமில்ல
அல்லேலக் குயிலே..

பெண் : மூக்குத்தி நத்து நீ எனக்கு
முத்துப் பல்லாக்கு நான் உனக்கு
மூக்குத்தி நத்து நீ எனக்கு
முத்துப் பல்லாக்கு நான் உனக்கு
என்ன மோசம் பண்ணி போகாதீங்க
சிப்பாயி மவனே
நான் முழுகிடுவேன் தண்ணியில
சிப்பாயி மவனே

ஆண் : தூக்கணத்தான் கூடு போலே
நீ முடிச்ச கொண்டையில
புத்திய பறி கொடுத்து
அல்லேலக் குயிலே
ரா பகலா தூக்கமில்லே
அல்லேலக் குயிலே
பித்து கொண்டு நிக்கிறேன்டி
அல்லேலக் குயிலே

பெண் : சவுக்கு மர நீளம் போலே
சாமி நீ வளந்ததாலே
எட்டி வந்து மாலை போட
கண்ணாடிக் கருப்பே
என் வளத்தி போதாதய்யா
கண்ணாடிக் கருப்பே

ஆண் : எட்டடி குச்சி போட்டுக்கலாம்
இழுத்து உள்ளே பூட்டிக்கலாம்
எட்டடி குச்சி போட்டுக்கலாம்
இழுத்து உள்ளே பூட்டிக்கலாம்
கெட்டி மஞ்சள பூசிக்கோடி
சப்பாதிப் பழமே
எந்தன் கிட்ட குந்தி பேசிக்கோடி
சப்பாதிப் பழமே

பெண் : வெள்ளி மொளச்சி போனாலும்
விடியக் காலம் ஆனாலும்
என் சேதி சொல்லி
மாளாதையா சிப்பாயி மவனே
சேட்டைகளும் ஓயாதையா
சிப்பாயி மவனே

ஆண் : ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி
ஆசையாக தண்ணி மொண்டு
நேத்து நீ சொன்ன சொல்லு
அல்லேலக் குயிலே
நெஞ்சுக்குள்ளே இனிக்குதடி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here