Singer : S. Janaki

Music by : T. G. Lingappa

Female : Attangal pal undu
Avaigalil idhu ondru
Attangal pal undu
Avaigalil idhu ondru
Thottrathil therivadhu ondru
Mana thudippil iruppadhu ondru
Mana thudippil iruppadhu ondru

Female : Haaa…
Attangal pal undu
Avaigalil idhu ondru

Female : Thendral kaatril malarkoottam aadumoru
Aattam paarkka azhagoottum
Seerum puyalil mugam thottram maari
Idhazh vaattam adaindhu thuyar oottum

Female : Kannukku virundhaagum kavalaikku marundhaagum
Menmai konda penmai thannai aanmai
Adhan unmai kandu pottruvadhu nanmai
Haaa..aa…aa…aahaaa…

Female : Attangal pal undu
Avaigalil idhu ondru

Female : Konjum thalaivan thirutholai thazhuvum
Malarmaalai tharaiyil vizhalaamaa
Koyil deiva silai thannai vaasarpadi
Munnae midhikka vidalaama

Female : Vandhadhu oru paadhai povadhu oru paadhai
Indru kanda paadhai thunbha paadhai
Idhai enni enni yengugiraal paedhai
Haaa..aa…aa…aahaaa…

Female : Attangal pal undu
Avaigalil idhu ondru
Attangal pal undu
Avaigalil idhu ondru

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பெண் : ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
தோற்றத்தில் தெரிவது ஒன்று
மனத் துடிப்பில் இருப்பது ஒன்று
மனத் துடிப்பில் இருப்பது ஒன்று…

பெண் : ஹா…..ஆஆ….
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று

பெண் : தென்றல் காற்றில் மலர்க்கூட்டம் ஆடுமொரு
ஆட்டம் பார்க்க அழகூட்டும்
சீறும் புயலில் முகம் தோற்றம் மாறி
இதழ் வாட்டமடைந்து துயரூட்டும்

பெண் : கண்ணுக்கு விருந்தாகும் கவலைக்கு மருந்தாகும்
மென்மை கொண்ட பெண்மை தன்னை ஆண்மை
அதன் உண்மை கண்டு போற்றுவது நன்மை
ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ்

பெண் : ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று

பெண் : கொஞ்சும் தலைவன் திருத்தோளை தழுவும்
மலர்மாலை தரையில் விழலாமா
கோயில் தெய்வ சிலை தன்னை வாசற்படி
முன்னே மிதிக்க விடலாமா

பெண் : வந்தது ஒரு பாதை போவது ஒரு பாதை
இன்று கண்ட பாதை துன்ப பாதை
இதை எண்ணி எண்ணி ஏங்குகிறாள் பேதை
ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ்

பெண் : ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here