Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Aavathum pennaalae
Manusan azhivathum penaalae
Vaazhvathum pennaalae
Avanae thaazhvathum pennaalae
Male : Aavathum pennaalae
Manusan azhivathum penaalae
Vaazhvathum pennaalae
Avanae thaazhvathum pennaalae
Male : Therkku madhuraiyil karpu sudar pattu
Vendhathum pennaalae
Andru vilaiyaattu sirupillai
Veera sivaaji aanathum pennaalae
Male : Nil endru sonnathum sul endru sooriyam
Nindrathu pennaalae
Chinna thaali kayittrukku paasakayiru
Andru thottarthum pennaalae
Male : India thanga padhakkam
Jeyiththathellaam pennaalae
India thanga padhakkam
Jeyiththathellaam pennaalae
Antha vazhi intha maga arasaala vanthaalae
Male : {Aavathum pennaalae
Manusan azhivathum penaalae
Vaazhvathum pennaalae
Avanae thaazhvathum pennaalae} (2)
Male : Manam kettu thasaathan seththu seththu
Uyir vittathum pennaale
Ada paththu thalaiyilum piththam kondu
Mannan kettathum pennaalae
Male : Paalavanam engum moolai kettu
Majunu ponathum pennaalae
Antha romapuri andru raththakulam
Endru aanathum pennaale
Male : Intha kaala katchigalum
Irandaachchu pennaalae
Intha kaala katchigalum
Irandaachchu pennaalae
Kai neettamaruththa paya
Kavizhnthaandi munnaalae
Male : {Aavathum pennaalae
Manusan azhivathum penaalae
Vaazhvathum pennaalae
Avanae thaazhvathum pennaalae} (2)
Male : Panja paandavargal pagai vendru
Kodi nattathum pennaalae
Namma indhiran chanthiran rendu
Payalgalum kettathum pennaalae
Male : Kollai kollum oru vellai
Tajmahal vathathum pennaalae
Paandi mannan aranmanai
Mannodu mannaagi ponathum pennaalae
Male : Nallathum kettathum ingae
Nadappathellaam pennaalae
Nallathum kettathum ingae
Nadappathellaam pennaalae
Muzhusaa paattil solla mudiyaathu ennaalae
Male : {Aavathum pennaalae
Manusan azhivathum penaalae
Vaazhvathum pennaalae
Avanae thaazhvathum pennaalae} (2)
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே
ஆண் : ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே
ஆண் : தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு
வெந்ததும் பெண்ணாலே
அன்று விளையாட்டு சிறுபிள்ளை
வீர சிவாஜி ஆனதும் பெண்ணாலே
ஆண் : நில் என்று சொன்னதும் சுள் என்று சூரியன்
நின்றது பெண்ணாலே
சின்ன தாலிக்கயிற்றுக்கு பாசக்கயிறு
அன்று தோற்றதும் பெண்ணாலே
ஆண் : இந்தியா தங்க பதக்கம்
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
இந்தியா தங்க பதக்கம்
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே
ஆண் : {ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)
ஆண் : மனம் கெட்டு தசரதன் செத்து செத்து
உயிர் விட்டதும் பெண்ணாலே
அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு
மன்னன் கெட்டதும் பெண்ணாலே
ஆண் : பாலைவனம் எங்கும் மூளை கெட்டு
மஜ்னு போனதும் பெண்ணாலே
அந்த ரோமாபுரி அன்று ரத்தகுளம்
என்று ஆனதும் பெண்ணாலே
ஆண் : இந்தக் கால கட்சிகளும்
இரண்டாச்சு பெண்ணாலே
இந்தக் கால கட்சிகளும்
இரண்டாச்சு பெண்ணாலே
கை நீட்ட மறுத்த பய
கவிழ்ந்தான்டி முன்னாலே
ஆண் : {ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)
ஆண் : பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று
கொடி நட்டதும் பெண்ணாலே
நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு
பயல்களும் கெட்டதும் பெண்ணாலே
ஆண் : கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை
தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே
பாண்டி மன்னன் அரண்மனை
மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே
ஆண் : நல்லதும் கெட்டதும் இங்கே
நடப்பதெல்லாம் பெண்ணாலே
நல்லதும் கெட்டதும் இங்கே
நடப்பதெல்லாம் பெண்ணாலே
முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே
ஆண் : {ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)