Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : A. Maruthakasi

Female : Humming…

Female : {Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum
Aadudhu paadudhu aasaiyil thaavudhu
Nenjam endhan nenjam ezhil minnjum} (2)

Female : Vanna vanna malar minnum kaatchigalai
Vaazhvil kaanuvadhu meidhana
Vaanam thoovum pani maavai pola
Pudhu kolam poduvadhum meidhaana
Naan ennavendru solvenidhai
Amma ammamma ammamma

Female : Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum

Female : Kannil vandhu ilanthendral konjuthae
Enna enna perum inbam pongudhae
Kaanbaavai ellam karpanai dhaano
Aandavan seiyum arpudham dhaano
Naan ennavendru solvenidhai
Amma ammamma ammamma

Female : Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum
Aadudhu paadudhu aasaiyil thaavudhu
Nenjam endhan nenjam ezhil minnjum

Female : Maragadha vanna pachai pattu
Mannai thazhuvi minnum azhagai kanden
Varnanai seiya vaarthaigal illai
Kangal pettra payanai naanum konden
Naan ennavendru solvenidhai
Amma ammamma ammamma

Female : Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum
Aadudhu paadudhu aasaiyil thaavudhu
Nenjam endhan nenjam ezhil minnjum

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : .………….

பெண் : {ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்
எங்கும் பூமி எங்கும்
ஆடுது பாடுது ஆசையில் தாவுது
நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்} (2)

பெண் : வண்ண வண்ண மலர் மின்னும் காட்சிகள்
வாழ்வில் காணுவது மெய்தானா
வானம் தூவும் பனி மாவைப்போல
புதுக்கோலம் போடுவதும் மெய்தானா
நான் என்னென்று சொல்வேனிதை
அம்மா அம்மம்மா அம்மம்மா……..

பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்
எங்கும் பூமி எங்கும்

பெண் : கண்ணில் வந்து இளந்தென்றல் கொஞ்சுதே
எண்ண எண்ண பெரும் இன்பம் பொங்குதே
காண்பவை எல்லாம் கற்பனை தானோ
ஆண்டவன் செய்யும் அற்புதம் தானோ
நான் என்னென்று சொல்வேனிதை
அம்மா அம்மம்மா அம்மம்மா……..

பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்
எங்கும் பூமி எங்கும்
ஆடுது பாடுது ஆசையில் தாவுது
நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்

பெண் : மரகத வண்ணப் பச்சைப் பட்டு
மண்ணை தழுவி மின்னும் அழகைக் கண்டேன்
வர்ணனை செய்ய வார்த்தைகள் இல்லை
கண்கள் பெற்ற பயனை நானும் கொண்டேன்
நான் என்னென்று சொல்வேனிதை
அம்மா அம்மம்மா அம்மம்மா……..

பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்
எங்கும் பூமி எங்கும்
ஆடுது பாடுது ஆசையில் தாவுது
நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here