Singers : Vani Jairam and K. S. Chitra

Music by : Raveendran and Gangai Amaran

Lyrics by : B. A. Chidambaranathan

Female : Aayiram kangal kondaval
Magalin vizhigalai paaradi
Kangalil kaatchi illaiyael
Ullagam inbamum yaedhadi

Female : Vaazhvinil neeyum illaiyael
Enadhu vazhithunai yaaradi
Paavai endhan paarvai meendum
Oli pera varam kodu

Female : Aayiram kangal kondaval
Enathu vizhigalai paaradi
Kangalil kaatchi illaiyael
Ullaga inbamum yaedhadi

Female : Seerkaazhi pillai azhuthidum
Kural ketta velai kanivudan
Thirunayana paal thandha parameshwari
Poochoodum maadhu thavippathai
Nee ingu paaru ivaladhu
Puthu vaazhvil vilaketri nee aadhari

Female : Kuraiyulla manavi endraar
Kanavarum ennai veruthaar
Idainilae mezhugenavae
Urugiduthae en manadhae

Female : Vaazhvai thedi vantha pennai
Yaengi vaadum poovai ennai
Kaakka vendum kaali annai
Thudithudum malarkodi sirithida arulpuri

Female : Aayiram kangal kondaval
Magalin vizhigalai paaradi
Kangalil kaatchi illaiyael
Ullagam inbamum yaedhadi

Female : Abirami buttar azhaithida
Aagayam thannil pournami nilavaada
Vazhi seitha abiramiye

Female : Un vaasal vandhu muraiyidum
Kulamaadhu endhan kuraigalai
Nee theerkka koodaadho sivagami

Female : Thiruvadi saranadaindhom
Arul thara manamillayo
Vazhiyariyaa nilayinilae
Kalangukiraal en magale

Female : Pona paaravai meendum saera
Poovai vaazhvil thunbam theera
Vaazhuvu kaana valamum kaana
Thaaiyidam seiyival thaavena ketkiraal

Female : Aayiram kangal kondaval
Magalin vizhigalai paaradi
Kangalil kaatchi illaiyael
Ullagam inbamum yaedhadi

Female : Vaazhvinil neeyum illaiyael
Enadhu vazhithunai yaaradi
Paavai endhan paarvai meendum
Oli pera varam kodu

Female : Aayiram kangal kondaval
Enathu vizhigalai paaradi
Kangalil kaatchi illaiyael
Ullaga inbamum yaedhadi

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்
மகளின் விழிகளை பாரடி
கண்களில் காட்சி இல்லையேல்
உலக இன்பமும் ஏதடி

பெண் : வாழ்வினில் நீயும் இல்லையேல்
எனது வழித்துணை யாரடி
பாவை எந்தன் பார்வை மீண்டும்
ஒளி பெற வரம் கொடு

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்
எனது விழிகளை பாரடி
கண்களில் காட்சி இல்லையேல்
உலக இன்பமும் ஏதடி….

பெண் : சீர்காழி பிள்ளை அழுதிடும்
குரல் கேட்ட வேளை கனிவுடன்
திருஞான பால் தந்த பரமேஸ்வரி
பூச்சூடும் மாது தவிப்பதை
நீ இங்கு பாரு இவளது
புது வாழ்வில் விளக்கேற்றி நீ ஆதரி

பெண் : குறையுள்ள மனைவி என்றார்
கணவரும் எனை வெறுத்தார்
இடையினிலே மெழுகெனவே
உருகிடுதே என் மனதே

பெண் : வாழ்வை தேடி வந்த பெண்ணை
ஏங்கி வாடும் பூவை என்னை
காக்க வேண்டும் காளி அன்னை
துடித்திடும் மலர்க்கொடி சிரித்திட அருள்புரி

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்
மகளின் விழிகளை பாரடி
கண்களில் காட்சி இல்லையேல்
உலக இன்பமும் ஏதடி

பெண் : அபிராமி பட்டர் அழைத்திட
ஆகாயம் தன்னில் பௌர்ணமி நிலவாட
வழி செய்த அபிராமியே

பெண் : உன் வாசல் வந்து முறையிடும்
குலமாது எந்தன் குறைகளை
நீ தீர்க்க கூடாதோ சிவகாமி

பெண் : திருவடி சரணடைந்தோம்
அருள் தர மனமில்லையோ
வழியறியா நிலையினிலே
கலங்குகிறாள் என் மகளே

பெண் : போன பார்வை மீண்டும் சேர
பூவை வாழ்வில் துன்பம் தீர
வாழ்வு காண வளமும் காண
தாயிடம் சேயிவள் தாவென கேட்கிறாள்

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்
மகளின் விழிகளை பாரடி
கண்களில் காட்சி இல்லையேல்
உலக இன்பமும் ஏதடி

பெண் : வாழ்வினில் நீயும் இல்லையேல்
எனது வழித்துணை யாரடி
பாவை எந்தன் பார்வை மீண்டும்
ஒளி பெற வரம் கொடு

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்
மகளின் விழிகளை பாரடி
கண்களில் காட்சி இல்லையேல்
உலக இன்பமும் ஏதடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here