Singer : S. P. Balasubrahmanyam

Music by : Iniyavan

Lyrics by : Vairamuthu

Female : Aarirraaroo aariraaroo
Hmm mm hmm mm

Male : Aayiram thaan kavi sonnen
Azhagazhaga poi sonnen
Pethavalae un perumai
Oththavari sollalaiyae

Male : Kaathellaam magan paattu
Kaagithathil avan eluthu
Oorellaam magan pechu
Un keerthi ezhuthalaiyae

Male : Eluthavoo padikavo
Yelaadha thaai bakthi
Eluthi enna labaminnu
Ezhudhaama ponenoo

Male : Aayiram thaan kavi sonnen
Azhagazhaga poi sonnen
Pethavalae un perumai
Oththavari sollalaiyae

Male : Kadhakadhannu kalikindi
Kalikkullae kuzhi vetti
Karuppetti nallenna
Kalandhu tharuvaayae

Male : Thondaiyilae adhu irangum
Sugamaana ilanjoodu
Mandaiyila innum
Masamsannu nikkuthamma

Male : Varumaiyila naama patta
Valithanga maattaama
Penava naan eduthen
Prabanjam picherinjen

Male : Kalyanam naan senju
Kadhiyathu nikkayila
Petha appan chennai vandhu
Soth ezhuthi pona pinnae

Male : Anjaaru varusham
Un aasai mugam pakkaama
Pillai manam pithaachae
Petha manam kall aachae

Male : Paasam ulla velaiyilae
Kaasu panam koodalaiyaae
Kaasu vandha velaiyilae
Paasam vandhu seralaiyae

Male : Vaigaiyila oor muluga
Vallarum serndhezhuga
Kaipidiyaa kootivandhu
Karaiserthu vittavalae

Male : Amaaaaa
Enakkonnu aanadhunnaa
Unakku vera pillai undu
Unakkaedhum aanadhunna
Enakku veru thaaiyirukka
Enakku veru thaaiyirukka
Enakku veru thaaiyirukka..

Female : Aariraaroo
Ariraraaroo

பாடகர் :  எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசை அமைப்பாளர் : இனியவன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

 பெண் : ஆரிராரோ ஆரிராரோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண் : இனியவன் ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தவரி சொல்லலையே

ஆண் : காத்தெல்லாம் மகன் பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே

ஆண் : எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய் பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ

ஆண் : இனியவன் ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தவரி சொல்லலையே

ஆண் : கதகதன்னு களிகிண்டிக்
களிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

ஆண் : தொண்டையில அது இறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா

ஆண் : வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனாவ நான்எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்

ஆண் : கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே

ஆண் : அஞ்சாறு வருஷம்
உன் ஆசை முகம் பாக்காம
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே

ஆண் : பாசம் உள்ள வேளையிலே
காசு பணம் கூடலையே
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே

ஆண் : வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேர்த்து விட்டவளே

ஆண் : அம்மா …
எனக்கொண்ணு ஆனதுன்னா
உனக்கு வேற பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?
எனக்கு வேற தாயிருக்கா?
எனக்கு வேற தாயிருக்கா?

பெண் : ஆரிராரோ ஆரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here