Singers : Shruti Haasan and Ramya NSK

Music by : Ghibran

Female : Achamae agandruvidu
Madamae madindhuvidu

Female : Achamae agandruvidu
Madamae madindhuvidu
Naanamae nagarndhuvidu
Payirppae parandhuvidu

Female : Achamae agandruvidu
Madamae madindhuvidu
Naanamae nagarndhuvidu
Payirppae parandhuvidu

Female : Udambu enna viragaa
Naan unarchi izhandha sarugaa
Udambu enna viragaa
Naan unarchi izhandha sarugaa

Female : Kaadhal enbadhu thavara
Naan kallil seidha suvara

Female : Achamae agandruvidu
Madamae madindhuvidu
Naanamae nagarndhuvidu
Payirppae parandhuvidu

Female : Thekkamadaindhu kidakkindren
Ookkamizhandha vaazhkkaiyilae
Padukkai melae sidharugiren
Paaraiyil kottiya paal polae

Female : Thekkamadaindhu kidakkindren
Ookkamizhandha vaazhkkaiyile
Padukkai melae sidharugiren
Paaraiyil kottiya paal polae

Female : Thuikkaadha en idhazhai
Thuppi tholaiyeno
Thoondaadha en idhayathai thondi eriyeno
Paaraadha en azhugai paayil pudhaippeno
Theeraadha en kaadhal theeyil erippeno

Female : Munnor podhiyai sumappaeno
Illai innor vidhiyai padaippaeno
Munnor podhiyai sumappaeno
Illai innor vidhiyai padaippaeno

Female : Achamae agandruvidu
Madamae madindhuvidu
Naanamae nagarndhuvidu
Payirppae parandhuvidu

Female : Saathira kaidhiyaagindren
Saadhi padaitha siraigalilae
Mangaiyaga naan yen pirandhen
Malaiyil muttiya nadhi polae

Female : Saathira kaidhiyaagindren
Saadhi padaitha siraigalilae
Mangaiyaga naan yen pirandhen
Malaiyil muttiya nadhi polae

Female : Africa kaattil naan anilai pirappaeno
Atlantic kadalodu aara meenaaveno
Malaiyala malaiyil naan manikiliyaveno
Manidha piraviyatru manam pol vaazhveno

Female : Koottu puzhuvaai marippaeno
Illai pattupoochiyaai parappaeno
Koottu puzhuvaai marippaeno
Illai pattupoochiyai parappaeno

Female : Achamae agandruvidu
Madamae madindhuvidu
Naanamae nagarndhuvidu
Payirppae parandhuvidu

Female : Achamae agandruvidu
Madamae madindhuvidu
Naanamae nagarndhuvidu
Payirppae parandhuvidu

பாடகர்கள் : ஸ்ருதிஹாசன் மற்றும் ரம்யா என்.எஸ்.கே

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பெண் : அச்சமே அகன்றுவிடு
மடமே மடிந்துவிடு

பெண் : அச்சமே அகன்றுவிடு
மடமே மடிந்துவிடு
நாணமே நகர்ந்துவிடு
பயிர்ப்பே பறந்துவிடு

பெண் : அச்சமே அகன்றுவிடு
மடமே மடிந்துவிடு
நாணமே நகர்ந்துவிடு
பயிர்ப்பே பறந்துவிடு

பெண் : உடம்பு என்ன விறகா
நான் உணர்ச்சி இழந்த சருகா
உடம்பு என்ன விறகா
நான் உணர்ச்சி இழந்த சருகா

பெண் : காதல் என்பது தவறா
நான் கல்லில் செய்த சுவரா

பெண் : அச்சமே அகன்றுவிடு
மடமே மடிந்துவிடு
நாணமே நகர்ந்துவிடு
பயிர்ப்பே பறந்துவிடு

பெண் : தேக்கமடைந்து கிடக்கின்றேன்
ஊக்கமிழந்த வாழ்க்கையிலே
படுக்கை மேலே சிதறுகிறேன்
பாறையில் கொட்டிய பால் போலே

பெண் : தேக்கமடைந்து கிடக்கின்றேன்
ஊக்கமிழந்த வாழ்க்கையிலே
படுக்கை மேலே சிதறுகிறேன்
பாறையில் கொட்டிய பால் போலே

பெண் : துய்க்காத என் இதழில்
துப்பி தொலையேனோ
தூண்டாத என் இதயத்தை தோண்டி எறியேனோ
பாராத என் அழுகை பாயில் புதைப்பேனோ
தீராத என் காதல் தீயில் எரிப்பேனோ

பெண் : முன்னோர் பொதியை சுமப்பேனோ
இல்லை இன்னோர் விதியை படைப்பேனோ
முன்னோர் பொதியை சுமப்பேனோ
இல்லை இன்னோர் விதியை படைப்பேனோ

பெண் : அச்சமே அகன்றுவிடு
மடமே மடிந்துவிடு
நாணமே நகர்ந்துவிடு
பயிர்ப்பே பறந்துவிடு

பெண் : சாத்திர கைதியாகின்றேன்
சாதி படைத்த சிறைகளிலே
மங்கையாக நான் பிறந்தேன்
மலையில் முட்டிய நதி போலே

பெண் : சாத்திர கைதியாகின்றேன்
சாதி படைத்த சிறைகளிலே
மங்கையாக நான் பிறந்தேன்
மலையில் முட்டிய நதி போலே

பெண் : ஆப்பிரிக்கா காட்டில் நான் அணிலாய்
பிறப்பேனோ
அட்லாண்டிக் கடலோடு ஆர மீனாவேனோ
மலையாள மலையில் நான் மணிக்கிளியாவேனோ
மனித பிறவியற்று மனம் போல் வாழ்வேனோ

பெண் : கூட்டு புழுவாய் மரிப்பெனோ
இல்லை பட்டுபூச்சியாய் பறப்பேனோ
கூட்டு புழுவாய் மரிப்பெனோ
இல்லை பட்டுபூச்சியாய் பறப்பேனோ

பெண் : அச்சமே அகன்றுவிடு
மடமே மடிந்துவிடு
நாணமே நகர்ந்துவிடு
பயிர்ப்பே பறந்துவிடு

பெண் : அச்சமே அகன்றுவிடு
மடமே மடிந்துவிடு
நாணமே நகர்ந்துவிடு
பயிர்ப்பே பறந்துவிடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here