இசை அமைப்பாளர் : தேனிசை தென்றல் தேவா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
குழு : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
ஆண் : கைச்சரக்கும் மெய்யும் எம்மைக்
காவல்காக்கு மென்பதால்
குழு : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே…
ஆண் : உச்சவீரம் மானம் ஞானம்
உயிர்கலந்திருப்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
குழு : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
ஆண் : திராவிடத்தை வீழ்த்த எண்ணித்
தீவளர்த்த போதிலும்
அராவிடத்தை அள்ளி நாவில்
அப்பிவிட்ட போதிலும்…
ஆண் : பராபரத்தின் பேரில் சாதிப்
பகைவளர்த்த போதிலும்
சராசரங்கள் பாய்ச்சி எம்மைச்
சங்கறுத்த போதிலும்
குழு : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
ஆண் : பச்சை ரத்தம் ஈந்துகாக்கும்
படைகள் சூழ்ந்திருப்பதால்
குழு : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
கர்நாடிக் : …………………..
ஆண் : கச்சவிழ்க்கும் கணிகை யாரும்
கயமைபேசு போதிலும்
பிச்சை கேட்க வந்து நம்மின்
பெருமை திருடு போதிலும்
ஆண் : நச்சரிக்கும் பொய்கள் நம்மை
நக்கியுண்ட போதிலும்
உச்சமான புகழைக் கொஞ்சம்
ஊறுசெய்த போதிலும்
குழு : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
ஆண் : நிச்சயித்த நீதி நேர்மை
நெஞ்சகத்தில் நிற்பதால்
ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
ஆண் : கைச்சரக்கும் மெய்யும் எம்மைக்
காவல்காக்கு மென்பதால்
குழு : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அனைவரும் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே