Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Acham vittu naanam vittu unnai ketkkiren
En anbin meedhu aanaiyittu unmai ketkkiren
Ennai maalaiyittu manam muditha mannan neeyandro
Adhu unmai thaan andro

Female : Acham vittu naanam vittu unnai ketkkiren

Female : Paal kudikka vandha poonai bayandhu ponadho
Illai pazhaiya kaala ninaivai ellam marandhu ponadhoo
Enna enni indha neram oomaiyaanadhoo
Idhayathilae enna thaan kelviyaanadhoo

Female : Acham vittu naanam vittu unnai ketkkiren

Female : Potti pottu pesa vandhen vaarthaigal illai
Pookal kondu odi vandhen poojaiyum illai
Potti pottu pesa vandhen vaarthaigal illai
Pookal kondu odi vandhen poojaiyum illai

Female : Thaanae kaettu pengalukku pazhakkamum illai
Thaanae kaettu pengalukku pazhakkamum illai
Kula tharmathilae appadiyor vazhakkamum illai

Female : Acham vittu naanam vittu unnai ketkkiren

Female : Thunbangalil periya thunbam kaathiruppadhu
Oru thunai irundhum uravillamal paarthirupathu
Inam pirindha maanai pola thanithirupathu
Enna kettum badhil illamal yengi nirppadhu

Female : Acham vittu naanam vittu unnai ketkkiren
En anbin meedhu aanaiyittu unmai ketkkiren
Ennai maalaiyittu manam muditha mannan neeyandro
Adhu unmai thaan andro

Female : Acham vittu naanam vittu unnai ketkkiren

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என்
அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன்
என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ
அது உண்மைதானன்றோ……

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்

பெண் : பால் குடிக்க வந்த பூனை பயந்து போனதோ –இல்லை
பழைய கால நினைவையெல்லாம் மறந்து போனதோ
என்ன எண்ணி இந்த நேரம் ஊமையானதோ
இதயத்திலே என்னதான் கேள்வியானதோ

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்

பெண் : போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை
பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை
போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை
பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை

பெண் : தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை
தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை
குலதர்மத்திலே அப்படியோர் வழக்கமுமில்லை

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்

பெண் : துன்பங்களில் பெரிய துன்பம் காத்திருப்பது
ஒரு துணையிருந்தும் உறவில்லாமல் பார்த்திருப்பது
இனம் பிரிந்த மானை போல தனித்திருப்பது
என்ன கேட்டும் பதிலில்லாமல் ஏங்கி நிற்பது

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என்
அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன்
என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ
அது உண்மைதானன்றோ……

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here