Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : Chiththiraiyil pooththaval intha poovai
Shenbaga poo kangalil enna paarvai
Aththai magal kannamo anthi vaanam
Yaar varavai kandathaal intha naanam

Male : Seedhana kaattrum senthamizh paattum
Ondrinil ondru sangamam indru
Eththanaiyo karpanai ingu naam kaanalaam

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : ……………..

Male : Saaralilae poonguyil raagam paadum
Neeraruvi mellavae thaalam podum

Chorus : ……………..
Male : ……………..

Male : Thaen mazhalai pillaigal aadi paadum
Senthamizho ennaiyum pillai aakkum

Male : Sooriyan ingae suduvathum illai
Koodiya kaigal viduvathum illai
Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Chorus : ……………..
Male : ……………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண் : மலர் தொட்டில் இங்கே போடும்
மனக் கண்ணில் இன்றே
தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண் : சித்திரையில் பூத்தவள் இந்த பூவை
செண்பகப் பூ கண்களில் என்ன பார்வை
அத்தை மகள் கன்னமோ அந்தி வானம்
யார் வரவை கண்டதால் இந்த நாணம்

ஆண் : சீதனக் காற்றும் செந்தமிழ் பாட்டும்
ஒன்றினில் ஒன்று சங்கமம் இன்று
எத்தனையோ கற்பனை இங்கு நாம் காணலாம்

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண் : ………………….

ஆண் : சாரலிலே பூங்குயில் ராகம் பாடும்
நீரருவி மெல்லவே தாளம் போடும்

குழு : ………………………
ஆண் : ……………………

ஆண் : தேன் மழலைப் பிள்ளைகள் ஆடிப் பாடும்
செந்தமிழோ என்னையும் பிள்ளை ஆக்கும்

ஆண் : சூரியன் இங்கே சுடுவதும் இல்லை
கூடிய கைகள் விடுவதும் இல்லை
வா மகளே வந்து பார் சொர்க்கம் இங்கில்லையோ

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
மலர் தொட்டில் இங்கே போடும்
மனக் கண்ணில் இன்றே
தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்….

குழு : ……………………
ஆண் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here