Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male : Ada vaazhupothu manithanae
Oru malaiyaai vaazhadaa
Ada veezhumpothum mannilae
Oru vidhaiyaai veezhadaa

Male : Ingu nalaigal enbavai oru nambikkaithanadaa
Nee ezhunthaal pothum imayam unakku keezhadaa

Male : Oru vedan vedan varugiraan
Palar vedam kalaikka viraikiraan

Male : Ada mannil veezhum neerthuli
Adhu maranam kaanumaa
Adhan vadivam thottram maaralaam
Uru marainthae pogumaa

Male : nee theeyaai poividu unai eekkal theendumaa
Ada phoenix paravai eriththaalkooda saagumaa

Male : Oru vedan vedan varugiraan
Palar vedam kalaikka viraikiraan

Male : Ada maraththin kilaigal veezhnthapin
Adhu marupadi thulirkkumae
Antha vaanil nilavu theainthapin
Adhu marupadi valarumae

Male : Karumpaarai idukkilum
Sil vergal mulaikkumae
Idhai unarvaai manithaa
Unakkum nambikkai pirakkumae

Male : Pudhu vedan vedan neeyadaa
Ini vengai maelae paayadaa

Male : Ila raththakarai konda latchiyam
Adhu saayam povathillaiyae
Pala thazhumbu vaangiya thaththuvam
Endrum vizhunthu povathillaiyae

Male : Endrum thuninthavan vaazhakkaiyil
Oru tholviyum illaiyae
Ada karumaththai mudippavan
Pirappathum irappathum illaiyae

Male : Ungal vedan vedan varugiraan
Thara vettai aada varugiraan….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : அட வாழும்போது மனிதனே
ஒரு மலையாய் வாழடா
அட வீழும் போதும் மண்ணிலே
ஒரு விதையாய் வீழடா

ஆண் : இங்கு நாளைகள் என்பவை ஒரு நம்பிக்கைதானடா
நீ எழுந்தால் போதும் இமயம் உனக்கு கீழடா

ஆண் : ஒரு வேடன் வேடன் வருகிறான்
பலர் வேடம் கலைக்க விரைகிறான்….

ஆண் : அட மண்ணில் வீழும் நீர்த்துளி
அது மரணம் காணுமா
அதன் வடிவம் தோற்றம் மாறலாம்
உரு மறைந்தே போகுமா

ஆண் : நீ தீயாய் போய்விடு உனை ஈக்கள் தீண்டுமா
அட பீனிக்ஸ் பறவை எரித்தால் கூட சாகுமா

ஆண் : ஒரு வேடன் வேடன் வருகிறான்
பலர் வேடம் கலைக்க விரைகிறான்….

ஆண் : அட மரத்தின் கிளைகள் வீழ்ந்தப்பின்
அது மறுபடி துளிர்க்குமே
அந்த வானில் நிலவு தேய்ந்தப்பின்
அது மறுபடி வளருமே

ஆண் : கரும்பாறை இடுக்கிலும்
சில வேர்கள் முளைக்குமே
இதை உணர்வாய் மனிதா
உனக்கும் நம்பிக்கை பிறக்குமே

ஆண் : புது வேடன் வேடன் நீயடா
இனி வேங்கை மேலே பாயடா…..

ஆண் : இள ரத்தக்கறை கொண்ட லட்சியம்
அது சாயம் போவதில்லையே
பல தழும்பு வாங்கிய தத்துவம்
என்றும் விழுந்து போவதில்லையே

ஆண் : என்றும் துணிந்தவன் வாழ்க்கையில்
ஒரு தோல்வியும் இல்லையே
அட கருமத்தை முடிப்பவன்
பிறப்பதும் இறப்பதும் இல்லையே…..

ஆண் : உங்கள் வேடன் வேடன் வருகிறான்
தர வேட்டை ஆட வருகிறான்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here