Singers : Mano and K. S. Chitra

Music by : Manoj – Gyan

Lyrics by : Vaali

Female : Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Male : Panivaadaiyum nadai poduthu
Pasuncholail vilayaaduthu

Female : Thullugindra thullalum enna
Chinanchiru pookkalae
Male : Sollugindra sangathi enna
Ennudaya kaadhilae
Female : Thendral ula varum neram

Female : Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu

Female : Neerodayil alaigalil ezhum keerthanam
Naan ketkayil enakadhu oru moganam
Male : Aagaayam bhoomi aanandha kolam
Yaegaathamaana ilavenirkaalam

Female : Orraayiram unarchigal tharum vaalibam
Oyaamale ninaivinil pala naadagam
Male : Ponaana thegam poopola verkka
Keezhvaanil mella poobaalam ketka
Female : kukukukukoo kukukukukoo
Kukukukukoo….

Female : Oo….adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu

Male : Thoongaamalae vizhiththathu pala raathiri
Thirumeniyum kothithathu anal mathiri
Female : Devaathi devan thunai sera vendum
Kaanatha katchi kannodu thondrum

Male : Thaangaamalae thavithathu siru poongkodi
Senthooram pol sivanthadhu iru maan vizhi
Female : Viragangal polae naragangal yaedhu
Melaadai kooda sumaiyaagum pothu
Male : Kukukukukoo kukukukukoo
Kukukukukoo….

Female : Aa….adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Male : Panivaadaiyum nadai poduthu
Pasuncholaiyil vilayaaduthu

Female : Thullugindra thullalum enna
Chinanchiru pookkalae
Male : Sollugindra sangathi enna
Ennudaya kaadhilae
Female : Thendral ula varum neram

Both : Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
ஆண் : பனிவாடையும் நடை போடுது
பசுஞ்சோலையில் விளையாடுது

பெண் : துள்ளுகின்ற துள்ளலும் என்ன
சின்னஞ்சிறு பூக்களே
ஆண் : சொல்லுகின்ற சங்கதி என்ன
என்னுடைய காதிலே
பெண் : தென்றல் உலா வரும் நேரம்

பெண் : அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

பெண் : நீரோடையில் அலைகளில் எழும் கீர்த்தனம்
நான் கேட்கையில் எனக்கது ஒரு மோகனம்
ஆண் : ஆகாயம் பூமி ஆனந்த கோலம்
ஏகாந்தமான இளவேனிற்காலம்

பெண் : ஓராயிரம் உணர்ச்சிகள் தரும் வாலிபம்
ஓயாமலே நினைவினில் பல நாடகம்
ஆண் : பொன்னான தேகம் பூப்போல வேர்க்க
கீழ்வானில் மெல்ல பூபாளம் கேட்க
பெண் : குக்குக்குக்கூ குக்குக்குக்கூ
குக்குக்குக்கூ……

பெண் : ஓஒ….அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

ஆண் : தூங்காமலே விழித்தது பல ராத்திரி
திருமேனியும் கொதித்தது அனல் மாதிரி
பெண் : தேவாதிதேவன் துணை சேர வேண்டும்
காணாத காட்சி கண்ணோடு தோன்றும்

ஆண் : தாங்காமலே தவித்தது சிறு பூங்கொடி
செந்தூரம் போல் சிவந்தது இரு மான் விழி
பெண் : விரகங்கள் போலே நரகங்கள் ஏது
மேலாடை கூட சுமையாகும் போது
ஆண் : குக்குக்குக்கூ குக்குக்குக்கூ
குக்குக்குக்கூ…….

ஆண் : ஆ…..அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
பெண் : பனிவாடையும் நடை போடுது
பசுஞ்சோலையில் விளையாடுது

ஆண் : துள்ளுகின்ற துள்ளலும் என்ன
சின்னஞ்சிறு பூக்களே
பெண் : சொல்லுகின்ற சங்கதி என்ன
என்னுடைய காதிலே
ஆண் : தென்றல் உலா வரும் நேரம்

இருவர் : அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here