Singer : S. P. Balasubramanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vairamuthu

Male : Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru

Male : Pookkal vizhiththu kangal thudaiththu
Kaalai vanakkam sollum
Thoongi kidantha sooriyan ezhunthu
Sompal muriththu kollum

Male : Kulikkumpothu therikkum thuliyil
Kodi vairangal minnum
Kulikkumpothu therikkum thuliyil
Kodi vairangal minnum

Male : Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru

Male : Amma koduppaal coffee kalanthu
Endrum athuthaan inippu marunthu
Amma koduppaal coffee kalanthu
Endrum athuthaan inippu marunthu

Male : Dosai aarum rushiyum maarum
Mudhalil kaippattra munthu….aahaahaa
Dosai aarum rushiyum maarum
Mudhalil kaippattra munthu…

Male : Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru

Male : Paarththu puliththu kasantha pothum
Pazhagi pona pantham
Uyiril nirainthu manthil vazhinthu
Sugangal valarkkum sontham

Male : Kootti perukki kazhiththu paarththaal
Vaazhvil anbe minjum aa…..aa….
Kootti perukki kazhiththu paarththaal
Vaazhvil anbe minjum

Male : Adhikaalaiyil pani kaattrugal
Veesida kandaen kulirae theendaathiru
Kulirae…….aaha aha….aa…..theendaathiru

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண் : பூக்கள் விழித்து கண்கள் துடைத்து
காலை வணக்கம் சொல்லும்
தூங்கி கிடந்த சூரியன் எழுந்து
சோம்பல் முறித்து கொள்ளும்

ஆண் : குளிக்கும்போது தெறிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்………
குளிக்கும்போது தெறிக்கும் துளியில்
கோடி வைரங்கள் மின்னும்………

ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண் : அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து
அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து
என்றும் அதுதான் இனிப்பு மருந்து

ஆண் : தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைப்பற்ற முந்து…..ஆஹாஹா
தோசை ஆறும் ருசியும் மாறும்
முதலில் கைப்பற்ற முந்து…..

ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு

ஆண் : பார்த்து புளித்து கசந்த போதும்
பழகி போன பந்தம்
உயிரில் நிறைந்து மனதில் வழிந்து
சுகங்கள் வளர்க்கும் சொந்தம்

ஆண் : கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆ…ஆ…
கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சும்

ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள்
வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு
குளிரே……ஆஹ அஹா…..ஆ……தீண்டாதிரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here