Singers : P. Susheela and Chorus
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Chorus : Adi aathirathil saathirathai
Ammadi maranthaaiyoo
Dhinam ariyaamal puriyaamal
Aiyaavai ninaithaaiyoo
Chorus : Adi paadhiyilae otti sellum
Pallaakku nulaiyaadhu
Pengal palli kollum
Veetukullae sallabam nadakkadhu
Chorus : Adi aathirathil saathirathai
Ammadi maranthaaiyoo
Dhinam ariyaamal puriyaamal
Aiyaavai ninaithaaiyoo
Female : Seedhai kannil raman thottram
Raadhai kannil kannan thottram
Seedhai kannil raman thottram
Raadhai kannil kannan thottram
Ellorukkum ullam ondru undaanadhu
Ullaam thannil pathaam vaasal nindraadhu
Chorus : Adi kathu konda vithaiellam kattura
Udal thathuvathai istathukku maathura
Konda achathaiyum vittu vittu paakkura
Vandha vetkathaiyum vittu vittu kekkira
Female : Idhukku yaaradi vidhivilakku
Adi aathirathil saathirathai ammadi maarndhaaiyoo
Idhai ariyaamal puriyaamal pennaaga pirandhaayoo
Female : Kangal irandu kaatchi ondru
Penmai endraal aatchi undu
Poovanadhum angae vandhu vandaadudhu
Koodathu endru sonnaal kooda kondaadudhu
Chorus : Idhu rombha rombha muthivitta paithiyam
Ini nimidathil illaiyadi vaithiyam
Idhu andhi pagal illadha yaathirai
Ini aiyan vandhu thandhaal thaan maathirai
Female : Idhukku yaaradi vidhivilakku
Adi aathirathil saathirathai ammadi maarndhaaiyoo
Idhai ariyaamal puriyaamal pennaaga pirandhaayoo
Female : Adi pasiyaale oosi koru
Pallaakku vadivaagum
Pengal palli kondaal
Karpanaiyil sallabam uruvaagam
Female : Adi aathirathil saathirathai
Ammadi maranthaaiyoo
Idhai ariyaamal puriyaamal
Pennaaga pirandhaaiyoo
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
குழு : அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
தினம் அறியாமல் புரியாமல்
அய்யாவை நினைத்தாயோ
குழு : அடி பாத்தியிலே ஓட்டி செல்லும்
பல்லாக்கு நுழையாது
பெண்கள் பள்ளி கொள்ளும்
வீட்டுக்குள்ளே சல்லாபம் நடக்காது
குழு : அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
தினம் அறியாமல் புரியாமல்
அய்யாவை நினைத்தாயோ
பெண் : ராதை கண்ணில் கண்ணன் தோற்றம்
சீதை கண்ணில் ராமன் தோற்றம்
ராதை கண்ணில் கண்ணன் தோற்றம்
சீதை கண்ணில் ராமன் தோற்றம்
எல்லோருக்கும் உள்ளம் ஒன்று உண்டானது
உள்ளம் தன்னில் பத்தாம் வாசல் நின்றாடுது
குழு : அடி கத்து கொண்ட வித்தையெல்லாம் காட்டுறா
உடல் தத்துவத்தை இஷ்டத்துக்கு மாத்துறா
கொண்ட அச்சத்தையும் விட்டுவிட்டு பாக்குறா
வந்த வெட்கத்தையும் விட்டுவிட்டு கேக்கிறா
பெண் : இதுக்கு யாரடி விதிவிலக்கு……..
அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
இதை அறியாமல் புரியாமல்
பெண்ணாக பிறந்தாயோ
பெண் : கண்கள் இரண்டு காட்சி ஒன்று
பெண்மை என்றால் ஆட்சி உண்டு
பூவானதும் அங்கே வந்து வண்டாடுது
கூடாது என்று சொன்னால் கூட கொண்டாடுது
குழு : இது ரொம்ப ரொம்ப முத்திவிட்ட பைத்தியம்
இனி நம்மிடத்தில் இல்லையடி வைத்தியம்
இது அந்தி பகல் இல்லாத யாத்திரை
இனி அய்யன் வந்து தந்தால்தான் மாத்திரை
பெண் : இதுக்கு யாரடி விதிவிலக்கு….
அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
இதை அறியாமல் புரியாமல்
பெண்ணாக பிறந்தாயோ
பெண் : அடி பாசியிலே ஊசி கோரு
பல்லாக்கு வடிவாகும்
பெண்கள் பள்ளிக் கொண்டால்
கற்பனையில் சல்லாபம் உருவாகும்
பெண் : அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை
அம்மாடி மறந்தாயோ
இதை அறியாமல் புரியாமல்
பெண்ணாக பிறந்தாயோ