Singers : P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Adi yendi asattu pennae
Un ennathil yaaradi kannae
Vaanaththu chandhirano
Vadivathil sundharano
Yaaraayirundhaalum enna

Female : Adi yendi asattu pennae
En ennathil yaaradi kannae
Vaanaththu chandhiranum
Vadivathil sundharanum
Vandhaalum idam illai sonnen

Female : Ullaththai thottaal undaavadhu
Kai thottadhum ennam ondraavadhu
Ondraavadhu
Ullaththai thottaal undaavadhu
Kai thottadhum ennam ondraavadhu
Aasai oonjal aadum paavai kaadhal nenjam
Thaabaththil thaanindru thallaadudhu

Female : Mai vaitha kinnam kannallavaa
Nee poi vaithu sollum pennallavaa
Mai vaitha kinnam kannallavaa
Nee poi vaithu sollum pennallavaa
Maalai soodum tholil aadum kaalam neram
Deivaththai kettingu naan sollavo
Deivaththai kettingu naan sollavo

Female : Adi yendi asattu pennae
En ennathil yaaradi kannae

Female : Vaanaththu chandhiranum
Vadivathil sundharanum
Vandhaalum idam illai sonnen

Female : Chithira kannam punnaagavae
Un sitridai konjam thindaadavae
Chithira kannam punnaagavae
Un sitridai konjam thindaadavae
Paalum thaenum maelum maelum oorum neram
Poo maeni panneeril neeraadumae

Female : Inbathin paadhai nee kandadhu
En ennathin ellai yaar kandadhu
Inbathin paadhai nee kandadhu
En ennathin ellai yaar kandadhu
Paasam nesam thyaagam panbu naalum kondu
Vaazhgindra aanandham naan kandadhu
Vaazhgindra aanandham naan kandadhu

Female : Adi yendi asattu pennae
En ennathil yaaradi kannae
Vaanaththu chandhirano
Vadivathil sundharano
Yaaraayirundhaalum enna

Female : Vaanaththu chandhiranum
Vadivathil sundharanum
Vandhaalum idam illai sonnen

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அடி ஏன்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ
வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன

பெண் : அடி ஏன்டி அசட்டுப்பெண்ணே
என் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனும்
வடிவத்தில் சுந்தரனும்
வந்தாலும் இடமில்லை சொன்னேன்

பெண் : உள்ளத்தை தொட்டால் உண்டாவது
கை தொட்டதும் எண்ணம் ஒன்றாவது
ஒன்றாவது
உள்ளத்தை தொட்டால் உண்டாவது
கை தொட்டதும் எண்ணம் ஒன்றாவது
ஆசை ஊஞ்சல் ஆடும் பாவை காதல் நெஞ்சம்
தாபத்தில் தானின்று தள்ளாடுது

பெண் : மை வைத்த கிண்ணம் கண்ணல்லவோ
நீ பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவோ
மை வைத்த கிண்ணம் கண்ணல்லவோ
நீ பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவோ
மாலை சூடும் தோளில் ஆடும் காலம் நேரம்
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ

பெண் : அடி ஏன்டி அசட்டுப்பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே

பெண் : வானத்து சந்திரனும்
வடிவத்தில் சுந்தரனும்
வந்தாலும் இடமில்லை சொன்னேன்

பெண் : சித்திரக் கன்னம் புண்ணாகவே
உன் சிற்றிடை கொஞ்சம் திண்டாடவே
சித்திரக் கன்னம் புண்ணாகவே
உன் சிற்றிடை கொஞ்சம் திண்டாடவே
பாலும் தேனும் மேலும் மேலும் ஊறும் நேரம்
பூ மேனி பன்னீரில் நின்றாடுமே

பெண் : இன்பத்தின் பாதை நீ கண்டது
என் எண்ணத்தின் எல்லை யார் கண்டது
இன்பத்தின் பாதை நீ கண்டது
என் எண்ணத்தின் எல்லை யார் கண்டது
பாசம் நேசம் தியாகம் பண்பு நாலும் கொண்டு
வாழ்கின்ற ஆனந்தம் நான் கண்டது
வாழ்கின்ற ஆனந்தம் நான் கண்டது

பெண் : அடி ஏன்டி அசட்டுப்பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ
வடிவத்தில் சுந்தரனோ
வந்தாலும் இடமில்லை சொன்னேன்

பெண் : வானத்து சந்திரனும்
வடிவத்தில் சுந்தரனும்
வந்தாலும் இடமில்லை சொன்னேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here