Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : Manoj-Gyan

Lyrics by : Vairamuthu

Chorus : …………….

Female : Adiyammaa raakkaayi azhaga paarunga
Ivarthaana mappilla muzhiya paarunga
Iruttukku thodhaana neramillaiyaa
Kaakkaikku ivar konjam sevappillaiyaa…aa…aa…

Chorus : Adiyammaa raakkaayi azhaga paarunga
Ivarthaana mappilla muzhiya paarunga
Iruttukku thodhaana neramillaiyaa
Kaakkaikku ivar konjam sevappillaiyaa…aa…aa…

Female : Adiyammaa raakkaayi azhaga paarunga
Ivarthaana mappilla muzhiya paarunga

Chorus : ……………

Female : Nadappathu nadakkattum ini
Karadiyin kayiloru kani
Madhiyondru ninaiththathu vithiyondru ninaiththathu
Thaali vanthaachchu thozhi

Female : Vairaththin tahram enna tharam
Nilakkari adhu enna niram
Jaadhagam sariyillai saathagam adhilillai
yaaro yaarodu yaaro

Chorus : Azhgaana thanthamthaan
Yaanaikku sonthamthaan
Azhgaana thanthamthaan
Yaanaikku sonthamthaan
Ammaadi vidhiyenna maarumaa theerumaa

Male : Adiyammaa raakkaayi naanthaan maappillai
Sodhichchu paaththukka naanthaan aampilla
Female : Ae…
Male : Maappillai karuppanthaan azhagillaiyaa
Manmathan karuppanthaan arivillaiyaa

Male : Adiyammaa haei
Adiyammaa haei
Adiyammaa raakkaayi naanthaan maappillai
Sodhichchu paaththukka naanthaan aampilla adiyaei

Male : Karuppukku ennadi kora
Un karumudi veluththathum narai
Vidhi ondru ninaikkattum madhiyathai jeyikkattum
Thaali ponnaana veli

Male : Vairangal engirunthu varum
Adi nilakkarithaan adhai tharum
Jaathagam poiyyadi sariththiram meiyyadi
Jodi saernthaachchu podi

Male : Azhagunnaa aabaththu anbuthaan nam soththu
Azhagunnaa aabaththu anbuthaan nam soththu
Kozhikku ennaalum sevalae kaavalae

Female : Adiyammaa raakkaayi azhaga paarunga
Male : Yaei
Female : Ivarthaana mappilla muzhiya paarunga
Male : Aahaan
Female : Iruttukku thodhaana neramillaiyaa
Kaakkaikku ivar konjam sevappillaiyaa

Chorus : Adiyammaa raakkaayi azhaga paarunga
Ivarthaana mappilla muzhiya paarunga
Iruttukku thodhaana neramillaiyaa
Kaakkaikku ivar konjam sevappillaiyaa

Male : Adiyammaa raakkaayi naanthaan maappillai
Sodhichchu paaththukka naanthaan aampilla adiyaei…ae…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : வைரமுத்து

குழு : …………………….

பெண் : அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க
இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க
இருட்டுக்கு தோதான நெறமில்லையா
காக்கைக்கு இவர் கொஞ்சம் செவப்பில்லையா…ஆ….ஆ…

குழு : அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க
இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க
இருட்டுக்கு தோதான நெறமில்லையா
காக்கைக்கு இவர் கொஞ்சம் செவப்பில்லையா

பெண் : அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க
இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க

குழு : …………………….

பெண் : நடப்பது நடக்கட்டும் இனி
கரடியின் கையிலொரு கனி
மதியொன்று நினைத்தது விதியொன்று நினைத்தது
தாலி வந்தாச்சு தோழி

பெண் : வைரத்தின் தரம் என்ன தரம்
நிலக்கரி அது என்ன நிறம்
ஜாதகம் சரியில்லை சாதகம் அதிலில்லை
யாரோ யாரோடு யாரோ

குழு : அழகான தந்தம்தான்
யானைக்கு சொந்தம்தான்
அழகான தந்தம்தான்
யானைக்கு சொந்தம்தான்
அம்மாடி விதியென்ன மாறுமா தீருமா

ஆண் : அடியம்மா ராக்காயி நான்தான் மாப்பிள்ளை
சோதிச்சு பாத்துக்க நான்தான் ஆம்பிள்ள
பெண் : ஏ…..
ஆண் : மாப்பிள்ளை கறுப்பன்தான் அழகில்லையா
மன்மதன் கறுப்பன்தான் அறிவில்லையா

ஆண் : அடியம்மா ஹேய்
அடியம்மா ஹேய்…….
அடியம்மா ராக்காயி நான்தான் மாப்பிள்ளை
சோதிச்சு பாத்துக்க நான்தான் ஆம்பிள்ள அடியேய்….

ஆண் : கறுப்புக்கு என்னடி கொற
உன் கறுமுடி வெளுத்ததும் நரை
விதி ஒன்று நினைக்கட்டும் மதியதை ஜெயிக்கட்டும்
தாலி பொன்னான வேலி

ஆண் : வைரங்கள் எங்கிருந்து வரும்
அடி நிலக்கரிதான் அதை தரும்
ஜாதகம் பொய்யடி சரித்திரம் மெய்யடி
ஜோடி சேர்ந்தாச்சு போடி

ஆண் : அழகுன்னா ஆபத்து அன்புதான் நம் சொத்து
அழகுன்னா ஆபத்து அன்புதான் நம் சொத்து
கோழிக்கு எந்நாளும் சேவலே காவலே

பெண் : அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க
ஆண் : ஏய்
பெண் : இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க
ஆண் : ஆஹான்
பெண் : இருட்டுக்கு தோதான நெறமில்லையா
காக்கைக்கு இவர் கொஞ்சம் செவப்பில்லையா

குழு : அடியம்மா ராக்காயி அழகப் பாருங்க
இவர்தானா மாப்பிள்ள முழியப் பாருங்க
இருட்டுக்கு தோதான நெறமில்லையா
காக்கைக்கு இவர் கொஞ்சம் செவப்பில்லையா

ஆண் : அடியம்மா ராக்காயி நான்தான் மாப்பிள்ளை
சோதிச்சு பாத்துக்க நான்தான் ஆம்பிள்ள….ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here