Singers : S. P. Balasubramanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : Adiyae vanitha ingae vaadi
Female : Adiyae lalithaa neeyum vaadi
Female : Kelvi melae kettu aala maattu maattu
Female : Kelvi melae kettu aala maattu maattu

Female : Sariyaana kelvigalai aahaah
Kelunga thozhigalae
Female : Sariyaana kelvigalai aahaah
Kelunga thozhigalae

Female : Rokkamaa kottanumaa
Thangamaa podanumaa
Female : Scooterum kodukkanumaa
Sonnatha seiyyanumaa

Female : Rokkamaa kottanumaa
Thangamaa podanumaa
Female : Scooterum kodukkanumaa
Sonnatha seiyyanumaa

Female : Soththai thedi alaiyuraangalae…ae…
Ponna veetta vadhaikkuraangalae…ae…
Female : Ullavanga kodukkuraangalae….ae…
Maththavanga thavikkuraangalae…ae….

Female : Laabaththa paakkuraanga
Paavaththa saekkuraanga
Female : Ivaringae enna raagam
Kettaakka vishayam varum

Male : Adiyae vanithaa eithaai ambu
Adiyae lalithaa seithaai vambu
Ulaga nadappa paarththu enna adhilae saerththu
Ulaga nadappa paarththu enna adhilae saerththu
Thavaraana kelvigala kettutta thozhigalae
Thavaraana kelvigala kettutta thozhigalae

Male : Ivalo sokkaththangam
Enakkaen venum thangam
Kunamo minnum vairam
Enakkaen innum vairam

Male : Panaththai mathikkavillaiyae
Manaththai naan thuthikkiraen
Kaalai ennai virkkavillaiyae
Kalangaththai yaerkkavillaiyae

Male : En kaalil naan nirkkavae
Ennaalum virumbugindraen
En vaazhvu ivalae endru
Innaalil arumbugindraen

Female : Adiyae radha…aa….
Azhaiththaal vaadi
Female : Unakkae thothaa…aa….
Amainthaai vaadi

Female : Ivarai pola aangal
Naattil irunthu vittaal
Female : Nammai pola pengal
Naliya thevaiyillai

Females : Sariyaana jodigalae
Pallaandu vaazhungalae
Sariyaana jodigalae
Pallaandu vaazhungalae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : அடியே வனிதா இங்கே வாடி
பெண் : அடியே லலிதா நீயும் வாடி
பெண் : கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு
பெண் : கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு

பெண் : சரியான கேள்விகளை ஆஹாஹ்
கேளுங்க தோழிகளே…..
பெண் : சரியான கேள்விகளை ஹ
கேளுங்க தோழிகளே…..

பெண் : ரொக்கமா கொட்டணுமா
தங்கமா போடணுமா
பெண் : ஸ்கூட்டரும் கொடுக்கணுமா
சொன்னத செய்யணுமா

பெண் : ரொக்கமா கொட்டணுமா
தங்கமா போடணுமா
பெண் : ஸ்கூட்டரும் கொடுக்கணுமா
சொன்னத செய்யணுமா

பெண் : சொத்தை தேடி அலையுறாங்களே…ஏ…
பொண்ணு வீட்ட வதைக்குறாங்களே….ஏ….
பெண் : உள்ளவங்க கொடுக்குறாங்களே….ஏ….
மத்தவங்க தவிக்கிறாங்களே….ஏ….

பெண் : லாபத்த பாக்குறாங்க
பாவத்த சேக்குறாங்க
பெண் : இவரிங்கே என்ன ரகம்
கேட்டாக்க விஷயம் வரும்….

ஆண் : அடியே வனிதா எய்தாய் அம்பு
அடியே லலிதா செய்தாய் வம்பு
உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து
உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து
தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே…..
தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே…..

ஆண் : இவளோ சொக்கத்தங்கம்
எனக்கேன் வேணும் தங்கம்
குணமோ மின்னும் வைரம்
எனக்கேன் இன்னும் வைரம்

ஆண் : பணத்தை மதிக்கவில்லையே
மனத்தை நான் துதிக்கிறேன்
காளை என்னை விற்கவில்லையே
களங்கத்தை ஏற்கவில்லையே

ஆண் : என் காலில் நான் நிற்கவே
எந்நாளும் விரும்புகின்றேன்
என் வாழ்வு இவளே என்று
இந்நாளில் அரும்புகிறேன்

பெண் : அடியே ராதா….ஆ……
அழைத்தால் வாடி
பெண் : உனக்கே தோதா…..ஆ…..
அமைந்தார் வாடி

பெண் : இவரைப் போல ஆண்கள்
நாட்டில் இருந்து விட்டால்
பெண் : நம்மைப் போல பெண்கள்
நலிய தேவையில்லை

பெண்கள் : சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களே
சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here