Singers : Dharapuram Sundarajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Aduththavan potta thaalaththukellaam
Aadaathae aadaathae aadaathae
Aduththavan potta thaalaththukellaam
Aadaathae aadaathae aadaathae
Antha aattamum paattamum kudumba ponnukku
Aagaathae aagaathae aagaathae….

Female : Eduththathukkellaam kurukkae vizhunthu
Kedukkaathae kedukkaathae kedukkaathae
Eduththathukkellaam kurukkae vizhunthu
Kedukkaathae kedukkaathae kedukkaathae
Enga paattan soththila aattam pottaal
Thadukkaathae thadukkaathae thadukkaathae

Male : Aduththavan potta thaalaththukellaam
Aadaathae aadaathae aadaathae aadaathae

Male : Veththilai pottu sivakka venum
Paththini ponnu udhadu
Kanda saayaththai poosi vaaya
Thoranthaa panaththukku kedu

Male : Koththu manjalai kozhaichchu potta
Mugaththiyum paaru
Adhil maavai araichchu poosiyirunthaa
Sagikkala paaru….aahaa…..sagikkala paaru….

Female : Koondhalukkeththa poovai soodi
Azhagu paarkkanum
Nalla kudumba pennum aadal kalaiyai
Pazhagi paarkkanum

Female : Iduppa valaichchu aadumpothu
Rasichchu paarkkanum
Unakku ishtamillaatti kashtapadaama
Odhungi irukkanum

Male : Aduththavan potta thaalaththukellaam
Aadaathae aadaathae aadaathae aadaathae

Male : Mathavi potta aattaththinaalae
Kovalan kettaanae
Avan mangal mangai kannagi pennai
Maranthu ponaanae

Male : Sutta piragu puththi poranthu
Sattiyai vittaanae
Avan pattathukkellaam kaaranam
Intha naatiyamthaanae

Female : Vanna mayilgalil chinna
Kuyilgalil pennum oru jaathi
Aval aadi thirivathum paadi parappathum
Iyarkkaiyin needhi

Female : Kannukkazhagaana ponnu mugamthaan
Vennilavin paathi
Adhai kattuppaduththa sattam vithippathu
Anthakkaala saedhi aahaahaa anthakaala saedhi

Male : Aduththavan potta thaalaththukellaam
Aadaathae aadaathae aadaathae
Female : Eduththathukkellaam kurukkae vizhunthu
Kedukkaathae kedukkaathae kedukkaathae

பாடகர்கள் : தாராபுரம் சுந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம்
ஆடாதே ஆடாதே ஆடாதே
அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம்
ஆடாதே ஆடாதே ஆடாதே
அந்த ஆட்டமும் பாட்டமும் குடும்ப பொண்ணுக்கு
ஆகாதே ஆகாதே ஆகாதே….

பெண் : எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து
கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே
எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து
கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே
எங்க பாட்டன் சொத்தில ஆட்டம் போட்டால்
தடுக்காதே தடுக்காதே தடுக்காதே…..

ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம்
ஆடாதே ஆடாதே ஆடாதே ஆடாதே

ஆண் : வெத்திலை போட்டு சிவக்க வேணும்
பத்தினி பொண்ணு உதடு
கண்ட சாயத்தைப் பூசி வாயத்
தொறந்தா பணத்துக்கு கேடு….

ஆண் : கொத்து மஞ்சளை கொழைச்சு போட்ட
முகத்தையும் பாரு
அதில் மாவை அரைச்சு பூசியிருந்தா……
சகிக்கல பாரு……ஆஹா……சகிக்கல பாரு…..

பெண் : கூந்தலுக்கேத்த பூவைச் சூடி
அழகு பார்க்கணும்
நல்ல குடும்ப பெண்ணும் ஆடல் கலையை
பழகிப் பார்க்கணும்

பெண் : இடுப்ப வளைச்சு ஆடும்போது
ரசிச்சுப் பார்க்கணும்
உனக்கு இஷ்டமில்லாட்டி கஷ்டப்படாம
ஒதுங்கி இருக்கணும்

ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம்
ஆடாதே ஆடாதே ஆடாதே ஆடாதே

ஆண் : மாதவி போட்ட ஆட்டத்தினாலே
கோவலன் கெட்டானே
அவன் மங்கல மங்கை கண்ணகி பெண்ணை
மறந்து போனானே

ஆண் : சுட்டப் பிறகு புத்தி பொறந்து
சட்டியை விட்டானே
அவன் பட்டதுக்கெல்லாம் காரணம்
இந்த நாட்டியம் தானே

பெண் : வண்ண மயில்களில் சின்னக்
குயில்களில் பெண்ணும் ஒரு ஜாதி
அவள் ஆடித் திரிவதும் பாடிப் பறப்பதும்
இயற்கையின் நீதி

பெண் : கண்ணுக்கழகான பொண்ணு முகம்தான்
வெண்ணிலவின் பாதி
அதை கட்டுப்படுத்த சட்டம் விதிப்பது
அந்தக்கால சேதி ஆஹாஹா அந்தக்கால சேதி

ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம்
ஆடாதே ஆடாதே ஆடாதே
பெண் : எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து
கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here