Singers : Mano and K. S. Chitra

Music by : K. Bhagyaraj

Lyrics by : Vaali

Female : Yae rasathi rasa enga thenpaandi rasa
Yae rasathi rasa enga thenpaandi rasa
Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee

Female : Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee
Illaamal thindaadum yaezhaikellaam
Thunai innaalum ennaalum needhaanaiyyaa

Female : Yae rasathi rasa enga thenpaandi rasa

Male : Yaezhai sirichchaakka naansirippaen
Female : Ennaalum kanneerai ne thudaippae
Male : Yaei oozhal purinjaalae por thoduppaen
Female : Unmaikku eppothum thol koduppae

Male : Maanam veeram nenjodu
Makkal sakthi nammodu achcham indri poraadu
Female : Vetri maalai nee soodu
Male : Kalangarai vilakena naam iruppom

Female : Rasaathi….aamaam…raasaathi
Vaa rasaa enga thenpaandi raasa
Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee

Female : Illaamal thindaadum yaezhaikellaam
Thunai innaalum ennaalum neethanaiyyaa

Female : Yae rasathi rasa enga thenpaandi rasa

Female : Aalamaram pola nee thazhaichchu
Male : Annaadam yaezhaikku nizhal koduppaen
Female : Neenda nedungaalam nee polaichchu
Male : Niyaaya dharmaththin vazhi nadappaen

Male : Yaeru poottum paattaali endrum engal koottaali
Naanum Neeyum thozhilaali kadavulthaan nam mudhalaali
Female : Uravukkum urimaikkum kural koduppom

Female : Rasathi….haei rasathi
Vaa rasaa enga thenpandi rasa
Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee

Female : Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee
Illaamal thindaadum yaezhaikellaam
Thunai innaalum ennaalum needhaanaiyyaa

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா
எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ

பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ
இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா

பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா

ஆண் : ஏழை சிரிச்சாக்கா நான் சிரிப்பேன்
பெண் : எந்நாளும் கண்ணீரை நீ துடைப்பே
ஆண் : ஏய் ஊழல் புரிஞ்சாலே போர் தொடுப்பேன்
பெண் : உண்மைக்கு எப்போதும் தோள் கொடுப்பே

ஆண் : மானம் வீரம் நெஞ்சோடு
மக்கள் சக்தி நம்மோடு அச்சம் இன்றி போராடு
பெண் : வெற்றி மாலை நீ சூடு
ஆண் : கலங்கரை விளக்கென நாம் இருப்போம்

பெண் : ராசாதி….ஆமாம்….ராசாதி
வா ராசா எங்க தென்பாண்டி ராசா
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ

பெண் : இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா

பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா….

பெண் : ஆலமரம் போல நீ தழைச்சு
ஆண் : அன்னாடம் ஏழைக்கு நிழல் கொடுப்பேன்
பெண் : நீண்ட நெடுங்காலம் நீ பொழைச்சு
ஆண் : நியாய தருமத்தின் வழி நடப்பேன்

ஆண் : ஏரு பூட்டும் பாட்டாளி என்றும் எங்கள் கூட்டாளி
நானும் நீயும் தொழிலாளி கடவுள் தான் நம் முதலாளி
பெண் : உறவுக்கும் உரிமைக்கும் குரல் கொடுப்போம்

பெண் : ராசாதி..ஹேய்….ராசாதி
வா ராசா எங்க தென்பாண்டி ராசா
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ

பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ
இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here