Singer : P. Susheela
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Arunagirinathar
Female : Seerkonda dheiva vadhanangal aarum
Seerkonda dheiva vadhanangal aarum
Thigazh kadappanthaar konda
Panniru tholgalum thamarai thaalgalum
Or koor konda velum mayilum
Narkozhi kodiyum
Arut kaar konda vanmai
Thanikaasalamum en kannuttrathae…
Thanikaasalamum en kannuttrathae…
Thanikaasalamum en kannuttrathae…
Female : Agaramum aagi athipanumaagi
Athigamumaagi agamaagi
Agaramum aagi athipanumaagi
Athigamumaagi agamaagi
Ayanenavaagi ariyenavaagi
Ariyenavaagi avarmelaai
Female : Agaramum aagi athipanumaagi
Athigamumaagi agamaagi
Ayanenavaagi ariyenavaagi
Ariyenavaagi avarmelaai
Female : Igaramumaagi evaigalumaagi
Inimaiyumaagi varuvonae
Ayanenavaagi ariyenavaagi
Ariyenavaagi avarmelaai
Female : Irunilameedhil eliyanum vaazha
Irunilameedhil eliyanum vaazha
Enathu munnodu varavenum
Female : Agaramum aagi athipanumaagi
Athigamumaagi agamaagi
Ayanenavaagi ariyenavaagi
Ariyenavaagi avarmelaai
Female : Magapathiyaaga maruvum valaari
Magizhkalikoorum vadivonae
Magapathiyaag maruvum valaari
Magizhkalikoorum vadivonae
Female : Vanamurai vedan aruliya poojai
Magizhkadhirkaamam udaiyonae
Vanamurai vedan aruliya poojai
Magizhkadhirkaamam udaiyonae
Female : Segaganusegu thaguthimi thothi
Thimiyena aadu mayilonae
Segaganusegu thaguthimi thothi
Thimiyena aadu mayilonae
Thirumalivaana pazhamuthirchozhai
Malaimisai mevu perumaalae
Malaimisai mevu perumaalae
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : அருணகிரிநாதர்
பெண் : சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
திகழ் கடப்பந் தார் கொண்ட
பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்
ஓர் கூர் கொண்ட வேலும் மயிலும்
நற்கோழிக் கொடியும் – அருட்
கார் கொண்ட வண்மைத்
தணிகாசலமும் என் கண்ணுற்றதே…….
தணிகாசலமும் என் கண்ணுற்றதே…….
தணிகாசலமும் என் கண்ணுற்றதே…….
பெண் : அகரமும் ஆகி அதிபனுமாகி
அதிகமுமாகி அகமாகி
அகரமும் ஆகி அதிபனுமாகி
அதிகமுமாகி அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி
அரனெனவாகி அவர்மேலாய்
பெண் : அகரமும் ஆகி அதிபனுமாகி
அதிகமுமாகி அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி
அரனெனவாகி அவர்மேலாய்
பெண் : இகரமுமாகி எவைகளுமாகி
இனிமையுமாகி வருவோனே
இகரமுமாகி எவைகளுமாகி
இனிமையுமாகி வருவோனே
பெண் : இருநிலமீதில் எளியனும் வாழ
இருநிலமீதில் எளியனும் வாழ
எனது முன்னோடி வரவேணும்….
பெண் : அகரமும் ஆகி அதிபனுமாகி
அதிகமுமாகி அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி
அரனெனவாகி அவர்மேலாய்
பெண் : மகபதியாகி மருவும் வலாரி
மகிழ்களிகூரும் வடிவோனே
மகபதியாகி மருவும் வலாரி
மகிழ்களிகூரும் வடிவோனே
பெண் : வனமுறை வேடன் அருளிய பூஜை
மகிழ்கதிர்காமம் உடையோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை
மகிழ்கதிர்காமம் உடையோனே
பெண் : செககணசேகு தகுதிமி தோதி
திமியென ஆடு மயிலோனே
செககணசேகு தகுதிமி தோதி
திமியென ஆடு மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை
மலைமிசை மேவு பெருமாளே…..
மலைமிசை மேவு பெருமாளே…..