Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Hmm hmm hmm hmm…hmm..

Ahahaha …..

Female : Aiyirandu thingalile
Kaiyirandil vanthavane
Aiyirandu thingalile
Kaiyirandil vanthavane

Female : Maiyezhudhum kangalile
Muthamizhai thanthavaney

Female : Arupadayil kudiyamarndha
Azhagu baalagano
Saravanano gurubarano
Valli velavano

Female : Aiyirandu thingalile
Kaiyirandil vanthavaney
Maiyezhudhum kangalile
Muthamizhai thanthavaney

Female : Aadidu kanmaniye
Aanip pon thotilile
Annam naan ootidavo
Maanikka vatilile

Female : Aadidu kanmaniye
Aanip pon thotilile
Annam naan ootidavo
Maanikka vattilile

Female : Iyatramizhum isaithamizhum
Mazhalayiley kondaada
Amma amma amma endru

Female : Iyatramizhum isaithamizhum
Mazhalayiley kondaada
Nee asainthu Nadakkaiyiley
Naadagamum Undaaga
Uyir kaaviyam nee endraaga

Female : Aiyirandu thingalile
Kaiyirandil vanthavaney
Maiyezhudhum kangalile
Muthamizhai thanthavaney

Female : Yaarathu thanthai endru
Oooraar unaik kaettaal
Thaayoru kannagi thaan
Thangamey nee uraippaai

Female : Yaarathu thanthai endru
Oooraar unaik kaettaal
Thaayoru kannagi thaan
Thangamey nee uraippaai

Female : Oruvanukkey maalaiyitaen
Uravu kolla methaiyittaen
Oruvanukkey maalaiyitaen
Uravu kolla methaiyittaen

Female : Manamarintha unmai ithu
Manivilakkaey sollivittaen
Antha theivathin mel
Aaniyittaen…………

Female : Aiyirandu thingalile
Kaiyirandil vanthavaney
Maiyezhudhum kangalile
Muthamizhai thanthavaney

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆஹாஹாஹா…..

பெண் : ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே
ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே

பெண் : மை வழியும் கண்களிலே
முத்தமிழைத் தந்தவனே

பெண் : அறுப்படையில் குடி அமர்ந்த
அழகு பாலகனோ
சரவணனோ குருபரனோ
வள்ளி வேலவனோ

பெண் : ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே
முத்தமிழைத் தந்தவனே

பெண் : ஆடிடு கண்மணியே
ஆணிப் பொன் தொட்டிலிலே
அன்னம் நான் ஊட்டிடவோ
மாணிக்க வட்டிலிலே

பெண் : ஆடிடு கண்மணியே
ஆணிப் பொன் தொட்டிலிலே
அன்னம் நான் ஊட்டிடவோ
மாணிக்க வட்டிலிலே

பெண் : இயற்றமிழும் இசைத்தமிழும்
மழலையிலே கொண்டாட
அம்மா அம்மா அம்மா என்ற

பெண் : இயற்றமிழும் இசைத்தமிழும்
மழலையிலே கொண்டாட
நீ அசைந்து நடக்கையிலே
நாடகமும் உண்டாக
உயிர் காவியம் நீ என்றாக…….

பெண் : ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே
முத்தமிழைத் தந்தவனே

பெண் : யாரது தந்தை என்று
ஊரார் உனைக் கேட்டால்
தாயொரு கண்ணகிதான்
தங்கமே நீ உரைப்பாய்

பெண் : யாரது தந்தை என்று
ஊரார் உனைக் கேட்டால்
தாயொரு கண்ணகிதான்
தங்கமே நீ உரைப்பாய்

பெண் : ஒருவனுக்கே மாலையிட்டேன்
உறவுக் கொள்ள மெத்தையிட்டேன்
ஒருவனுக்கே மாலையிட்டேன்
உறவுக் கொள்ள மெத்தையிட்டேன்

பெண் : மனமறிந்த உண்மை இது
மணிவிளக்கே சொல்லிவிட்டேன்
அந்த தெய்வத்தின் மேல்
ஆணையிட்டேன்……….

பெண் : ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே
முத்தமிழைத் தந்தவனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here