Singer : P. Susheela

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Female : Akkaraiyil avanirukka
Ikkaraiyil naanirukka
Akkaraiyillaadhathenna kadal alaiyae
Andru sendruvitta enn thalaivan varavillayae

Female : Akkaraiyil avanirukka
Ikkaraiyil naanirukka
Akkaraiyillaadhathenna kadal alaiyae
Andru sendruvitta enn thalaivan varavillayae

Female : Katti oru mutthamittu
Karpanaiyil kavi padithu
Katti oru mutthamittu
Karpanaiyil kavi padithu
Thottanaithu kaadhalukku kadal alaiyae
En tholirendum vaadudhadi kadal alaiyae…

Female : Kaiyile valayal illai
Kannirenddil thookamillai
Kattiulla aadaigalum kadal alaiyae
En sittridaiyil thangavillai kadal laiyae

Female : Akkaraiyil avanirukka
Ikkaraiyil naanirukka
Akkaraiyillaadhathenna kadal alaiyae
Andru sendruvitta enn thalaivan varavillayae

Female : Porsilaiyin nenjinilae
Poothirukkum malaraiyellaam
Porsilaiyin nenjinilae
Poothirukkum malaraiyellaam
Karsilaikku saathuvaenoh kadal alaiyae
En kanniraindha kaadhalanthaan varavillayae

Female : Meenaaga pirandhirundhaal
Vaendiyae thavamiruppaen
Naanaaga poaiyiruppaen kadal alaiyae
Naan maanaaga pirandhu vittaen kadal alaiyae

Female : Akkaraiyil avanirukka
Ikkaraiyil naanirukka
Akkaraiyillaadhathenna kadal alaiyae
Andru sendruvitta enn thalaivan varavillayae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அக்கரையில் அவனிருக்க
இக்கரையில் நானிருக்க
அக்கறையில்லாததென்ன கடல் அலையே
அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..

பெண் : அக்கரையில் அவனிருக்க
இக்கரையில் நானிருக்க
அக்கறையில்லாததென்ன கடல் அலையே
அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..

பெண் : கட்டி ஒரு முத்தமிட்டு
கற்பனையில் கவி படித்து
கட்டி ஒரு முத்தமிட்டு
கற்பனையில் கவி படித்து
தொட்டணைத்துக் காதலுக்கு கடல் அலையே
என் தோளிரண்டும் வாடுதடி கடல் அலையே…..

பெண் : கையிலே வளையலில்லை
கண்ணிரண்டில் தூக்கமில்லை
கட்டியுள்ள ஆடைகளும் கடல் அலையே.
என் சிற்றிடையில் தங்கவில்லை கடல் அலையே..

பெண் : அக்கரையில் அவனிருக்க
இக்கரையில் நானிருக்க
அக்கறையில்லாததென்ன கடல் அலையே
அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..

பெண் : பொற்சிலையின் நெஞ்சினிலே
பூத்திருக்கும் மலரையெல்லாம்
பொற்சிலையின் நெஞ்சினிலே
பூத்திருக்கும் மலரையெல்லாம்
கற்சிலைக்குச் சாத்துவேனோ கடல் அலையே
என் கண்ணிறைந்த காதலன்தான் வரவில்லையே

பெண் : மீனாகப் பிறந்திருந்தால்
வேண்டியே தவமிருப்பேன்
நானாகப் போயிருப்பேன் கடல் அலையே
நான் மானாகப் பிறந்து விட்டேன் கடல் அலையே….

பெண் : அக்கரையில் அவனிருக்க
இக்கரையில் நானிருக்க
அக்கறையில்லாததென்ன கடல் அலையே
அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here