Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum
Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum

Male : Adhu polavae nam vazhvilae
Azhiyaadha aanandham nerum
Adhu polavae nam vazhvilae
Azhiyaadha aanandham nerum

Female : Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum

Female : Azhagaaga idhazhgalaiyae asainthanda seidhu
Amudhoorum thaen manathai alli engum thoovi
Vilai madhiya kaatchi inbam vizhigalukkae thandhu
Maalai velaiyilae indha solaiyilae

Female : Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum
Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum

Male : Kannum manamum kalandhu uravaagi
Kadavul arulaalae karuthum niraiveri
Inimai yalikkum illaram thannilae
Inaindhu vittadhaalae endrum inimelae

Male : Adhu polavae nam vazhvilae
Azhiyaadha aanandham nerum

Male : Alai pola thendral malar meedhilae
Female : Vilaiyaadum inbathai paarum

Both : Adhu polavae nam vazhvilae
Azhiyaadha aanandham nerum

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்

ஆண் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்…….
அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்..

பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்

பெண் : அழகாக இதழ்களையே அசைந்தாடச் செய்து
அமுதூறும் தேன் மணத்தை அள்ளி எங்கும் தூவி
விலை மதியா காட்சி இன்பம் விழிகளுக்கே தந்து
மாலை வேளையிலே இந்த சோலையிலே..

பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்

ஆண் : கண்ணும் மனமும் கலந்து உறவாகி
கடவுள் அருளாலே கருத்தும் நிறைவேறி
இனிமையளிக்கும் இல்லறம் தன்னிலே
இணைந்து விட்டதாலே என்றும் இனிமேலே

ஆண் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்…….

ஆண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
பெண் : விளையாடும் இன்பத்தைப் பாரும்

இருவர் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here