Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Alangaram kalaiyaatha silai ondru kanden
Anbe un ezhil kanda orunalile
Alangaram kalaiyaatha silai ondru kanden
Anbe un ezhil kanda orunalile

Female : Aanandha megangal poothoova kanden
Aiya un mugam paartha oru naalile
Aanandha megangal poothoova kanden
Aiya un mugam paartha oru naalile
Aiya un mugam paartha oru naalile

Male : Kothodu pookanda panneer maram
Pon maalai pennukku manjam tharum
Kothodu pookanda panneer maram
Pon maalai pennukku manjam tharum

Female : Neerodu vilaiyaadi pogindra thendral
Nee konjam vilaiyaada nenjam tharum
Nee konjam vilaiyaada nenjam tharum

Female : Alangaram kalaiyaatha silai ondru kanden
Anbe un ezhil kanda orunalile

Female : Undaayin undendru manam kollavo
Illayin illendru vaan sellavo

Male : Enge un poopandhal melangalodu
Kalyana thamizh paadi nadamaaduvom
Kalyana thamizh paadi nadamaaduvom

Male : Alangaram kalaiyaatha silai ondru kanden
Anbe un ezhil kanda orunalile

Male : Thaan soodi malar thantha aandalidam
Azhagana malar maalai naam vanguvom
Thaan soodi malar thantha aandalidam
Azhagana malar maalai naam vanguvom

Female : Thaen aatchi thaan seiyum meenatchi saatchi
Thaen aatchi thaan seiyum meenatchi saatchi
Thiruveedhi valam vandhu ondraaguvom
Thiruveedhi valam vandhu ondraaguvom

Female : Alangaram kalaiyaatha silai ondru kanden
Anbe un ezhil kanda orunalile

Male : Alangaram kalaiyaatha silai ondru kanden
Anbe un ezhil kanda orunalile

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே

பெண் : ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

ஆண் : கொத்தோடு பூக்கண்ட பன்னீர் மரம்
பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்
கொத்தோடு பூக்கண்ட பன்னீர் மரம்
பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்

பெண் : நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்

பெண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே

பெண் : உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
இல்லாயின் இல்லென்று வான் செல்லவோ

ஆண் : எங்கே உன் பூப்பந்தல் மேளங்களோடு
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்

ஆண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே

ஆண் : தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்
தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்

பெண் : தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்..

பெண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே

ஆண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here