Singer : Ramya Nambeesan

Music by : Yuvan Shankar Raja

Female : Allola allolaaa…aa..aa…aa…aa..
Allola allolaaa…haa…aa…aa…

Female : Allola kallolam
Enna nenaichaalum
Allola kallolam
Enna panninaalum

Female : Kaadhal ennum boodham
Vandhu vilaiyaada
Naalu peru paadha
Maari engo poga

Female : Vaazhka oru kadhaiyathaan
Sirappaa ezhuthudhae
Mudivennaa…eppodhum sollaadhae
Yedho oru nambikkaiyil
Payanam thodaruthae
Ilakku illaama edhukkum nillaama

Female : Nerathai paarthaalae
Adhu baarathai koottaadha
Vaanathil thannaalae
Chinna velicham varaadhaa
Kelvikku ellaamae
Vidai sollitu pogaadhaa

Female : Nanbanoda thunbamellaam
Thannudaiya thunbamendru
Enni enni manasu onnu
Thavikkiradhae
Sondham kooda marandhu vidum
Bandhamellaam parandhuvidum
Natpukkulla pirivedhuvum
Kidaiyaadhae…

Female : Ponnukkulla manasundu
Latchiyamum adhilundu
Adhai unmai aakkidavae
Aasai varadhaa
Innoruththar latchiyathil
Kallerinju paakkura
Mosamaana pazhakkamum
Ingae oyaadhaa

Female : Mullu thottaalum
Poo kaayathai paarkaadhu
Vettrikku munnalae
Patta kaayangal nikkaadhu
Vedhanai vandhaalum
Adhu kaanama poyaachae
Sogathin pinnaalae
Oru sandhosam varadhaa

Female : Sogathin pinnaalae
Oru sandhosam varadhaa
Sogathin pinnaalae
Oru sandhosam varadhaa

பாடகி : ரம்யா நம்பீசன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : அல்லோல கல்லோலா…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
அல்லோல கல்லோலா…..ஹா……ஆ…..ஆ…..

பெண் : அல்லோல கல்லோலம்
என்ன நினைச்சாலும்
அல்லோல கல்லோலம்
என்ன பண்ணினாலும்

பெண் : காதல் என்னும் பூதம்
வந்து விளையாட
நாலு பேரு பாதை
மாறி எங்கோ போக

பெண் : வாழ்க்க ஒரு கதையத்தான்
சிறப்பா எழுதுதே
முடிவென்ன…..எப்போதும் சொல்லாதே
ஏதோ ஒரு நம்பிக்கையில்
பயணம் தொடருதே
இலக்கு இல்லாம எதுக்கும் நில்லாம

பெண் : நேரத்தை பார்த்தாலே
அது பாரத்தை கூட்டாதா
வானத்தில் தன்னால
சின்ன வெளிச்சம் வராதா
கேள்விக்கு எல்லாமே
விடை சொல்லிட்டு போகாதா

பெண் : நண்பனோட துன்பம் எல்லாம்
தன்னுடைய துன்பம் என்று
எண்ணி எண்ணி மனசு ஒன்னு
தவிக்கிறதே
சொந்தம்கூட மறந்து விடும்
பந்தமெல்லாம் பறந்துவிடும்
நட்புக்குள்ள பிரிவெதுவும்
கிடையாதே…..

பெண் : பொண்ணுக்குள்ள மனசுண்டு
லட்சியமும் அதிலுண்டு
அதை உண்மை ஆக்கிடவே
ஆசை வராதா
இன்னொருத்தர் லட்சியத்தில்
கல்லெறிஞ்சு பார்க்குற
மோசமான பழக்கமும்
இங்கே ஓயாதா

பெண் : முள்ளு தொட்டாலும்
பூ காயத்தை பார்க்காது
வெற்றிக்கு முன்னாலே
பட்ட காயங்கள் நிக்காது
வேதனை வந்தாலும்
அது காணாம போயாச்சே
சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா

பெண் : சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா
சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here