Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Haaa…aaa..aa
Amaidhi purave amaidhi purave
Azhaikkindren unnai
Nimmadhiyae nimmadhiyae naan
Nesikkindren unnai

Female : Amaidhi purave amaidhi purave
Azhaikkindren unnai
Nimmadhiyae nimmadhiyae naan
Nesikkindren unnai

Female : Amaidhi purave amaidhi purave
Azhaikkindren unnai

Female : Kaalangalaalae thendral varuga
Puyalae vara vendaam
Megangalaale mazhaiye varuga
Vellam vara vendam

Female : Veedugal thorum oliyae varuga
Irulae vara vendaam
Nadugal thorum uravae varuga
Pagaiyae vara vendaam

Female : Samadhaname samadhaname
Thazhuvugindren unnai
Dharmadevane dharmadevane
Saranadainthen unnai

Female : Amaidhi purave amaidhi purave
Azhaikkindren unnai

Female : Buthan vazhiyil asokan sevai
Purindhadhu edharkaaga
Punnagai mugame devanin veedena
Sonnadhu edharkkaaga

Female : Sathiya neriyai thaarani engum
Thandhadhu edharkaaga
Samadhanamaam samadhanamaam
Thaayae unakkaaga

Female : Amaidhi purave amaidhi purave
Azhaikkindren unnai
Nimmadhiyae nimmadhiyae naan
Nesikkindren unnai

Female : Amaidhi purave amaidhi purave
Azhaikkindren unnai

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹா..ஆஅ..ஆ
அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நான்
நேசிக்கின்றேன் உன்னை

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நான்
நேசிக்கின்றேன் உன்னை

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை

பெண் : காலங்களாலே தென்றல் வருக
புயலே வர வேண்டாம்
மேகங்களாலே மழையே வருக
வெள்ளம் வர வேண்டாம்

பெண் : வீடுகள் தோறும் ஒளியே வருக
இருளே வர வேண்டாம்
நாடுகள் தோறும் உறவே வருக
பகையே வர வேண்டாம்

பெண் : சமாதானமே சமாதானமே
தழுவுகிறேன் உன்னை
தர்மதேவனே தர்மதேவனே
சரணடைந்தேன் உன்னை

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை

பெண் : புத்தன் வழியில் அசோகன் சேவை
புரிந்தது எதற்காக
புன்னகை முகமே தேவனின் வீடெனச்
சொன்னது எதற்காக

பெண் : சத்திய நெறியைத் தாரணி எங்கும்
தந்தது எதற்காக
சமாதானமாம் சமாதானமாம்
தாயே உனக்காக ! தாயே உனக்காக !
.
பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நான்
நேசிக்கின்றேன் உன்னை

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here