Singer : T. R. Mahalingam
Music by : C. N. Pandurangan
Lyrics by : Kannadasan
Male : Aa…aa…aa…aah….aa….
Male : Ambalavaananai nambiya pergalum
Anantha nadamaaduvaar
Male : Aa….aa…aa…aah….aa….
Male : Ambalavaananai nambiya pergalum
Anantha nadamaaduvaar
Ambalavaananai nambiya pergalum
Anantha nadamaaduvaar
Male : Thanpalam theriyaamal sabaiyaeri vilaiyaadum
Thanpalam theriyaamal sabaiyaeri vilaiyaadum
Salangai kaalum mayangum kannum
Orumurai aganthaiyil vizhunthapin
Avanidam arul perum
Male : Ambalavaananai nambiya pergalum
Anantha nadamaaduvaar
Male : Yaezhisai kadazhezhu puviyaezhu naal yaezhu
Yaezhisai kadazhezhu puviyaezhu naal yaezhu
Navarasam navagunam navamani
Naattiya naayagan koottiya kalaiyandro
Naattiya naayagan koottiya kalaiyandro
Male : Naan yaar nee yaar naam yaar
Iraivanin sabaithanil nee yaar
Kalaigalil avanidam naam yaar
Naan yaar nee yaar…..
Male : Ambalavaananai nambiya pergalum
Anantha nadamaaduvaar…..
Male : Kattukkuzhal suttri suzhalavum
Nettri siru muththu sitharavum
Ottrai siru kaalil nadanamum
Mattrai siru kaalil buvanamum
Pattri tharum naathan avanathu arul vendum
Male : Idamo illai valamo
Edhilae avan palamo
Idamo illai valamo
Edhilae avan palamo
Irandum illai enil thiranda bhoomi idhu
Entha neramathil vizhumo
Pinbu ezhumo avanai thozhumo…..
Male : Maanudan aadidum naayagan paarvaiyil
Maanidan kavi paada
Mazhuvudan aadidum mannavan sabauyil
Valuvudan nadamaada thirumugam nadamaada
Male : Maanudan aadidum naayagan paarvaiyil
Maanidan kavi paada
Mazhuvudan aadidum mannavan sabauyil
Valuvudan nadamaada thirumugam nadamaada
Thanthom thanthom tharuvomena tharuvaan arulaaga…..
Male : Ambalavaananai nambiya pergalum
Anantha nadamaaduvaar…….
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆ…ஆ….ஆ….ஆஹ்..ஆ…….
ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும்
ஆனந்த நடமாடுவார்……….
ஆண் : ஆ…ஆ….ஆ….ஆஹ்..ஆ…….
ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும்
ஆனந்த நடமாடுவார்……….
அம்பலவாணனை நம்பிய பேர்களும்
ஆனந்த நடமாடுவார்……….
ஆண் : தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும்
தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும்
சலங்கைக் காலும் மயங்கும் கண்ணும்
ஒருமுறை அகந்தையில் விழுந்தபின்
அவனிடம் அருள் பெரும்
ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும்
ஆனந்த நடமாடுவார்……….
ஆண் : ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு
ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு
நவரசம் நவகுணம் நவமணி
நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ
நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ
ஆண் : நான் யார் நீ யார் நாம் யார்
இறைவனின் சபைதனில் நீ யார்
கலைகளில் அவனிடம் நாம் யார்
நான் யார் நீ யார்……………
ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும்
ஆனந்த நடமாடுவார்……….
ஆண் : கட்டுக்குழல் சுற்றி சுழலவும்
நெற்றிச் சிறு முத்துச் சிதறவும்
ஒற்றைச் சிறு காலில் நடனமும்
மற்றைச் சிறு காலில் புவனமும்
பற்றித் தரும் நாதன் அவனது அருள் வேண்டும்……
ஆண் : இடமோ இல்லை வலமோ
எதிலே அவன் பலமோ
இடமோ இல்லை வலமோ
எதிலே அவன் பலமோ
இரண்டும் இல்லை எனில் திரண்ட பூமி இது
எந்த நேரமதில் விழுமோ
பின்பு எழுமோ அவனைத் தொழுமோ……
ஆண் : மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில்
மானிடன் கவி பாட…….
மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில்
வலுவுடன் நடமாட திருமுகம் நடமாட
ஆண் : மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில்
மானிடன் கவி பாட…….
மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில்
வலுவுடன் நடமாட திருமுகம் நடமாட
தந்தோம் தந்தோம் தருவோமென தருவான் அருளாக…….
ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும்
ஆனந்த நடமாடுவார்……….