Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Devi…..ee…..ee….
Female : Deva….aa…..aa…
Male : Devi……

Male : Ambikai neril vanthaal
Anbinai alli thanthaal
Gopuram kannil kandaen
Konjidum kalasam kandaen
Devi…….en devi……

Female : Aalayam thiranthu vaiththaen
Aaraaththi thattum vaiththaen
Aalayam thiranthu vaiththaen
Aaraaththi thattum vaiththaen
Sannithaanam varaiyil
Deviyai kaana vaiththaen
Deva…..en deva…..

Female : Aalayam thiranthu vaiththaen
Aaraaththi thattum vaiththaen

Male : Povilae poojai seivaen
Kadhilae vedham solvaen
Povilae poojai seivaen
Kadhilae vedham solvaen
Aayiram kudangal kondu
Abhisegam nadaththi vaippaen

Female : Saaththpatti pottu vaipen
Santhanaththil oora vaippaen
Saaththpatti pottu vaipen
Santhanaththil oora vaippaen

Female : Arththa jaamam varaiyil
Ammanai kaana vaippaen
Arththa jaamam varaiyil
Ammanai kaana vaippaen
Deva….en deva….

Male : Ambikai neril vanthaal
Anbinai alli thanthaal

Female : Pallakkil yaetri vaippaen
Pamalai sootti vaippaen
Pallakkil yaetri vaippaen
Pamalai sootti vaippaen
Ullaasa oorvalaththil
Ullaththai mayanga vaipaen

Male : Koyilil kudiyirupen
Kuththu vilakkettri vaippaen
Koyilil kudiyirupen
Kuththu vilakkettri vaippaen
Devanin nilaiyil nindru
Deviyai thazhuvi kolvaen
Devi…….en devi……

Male : Ambikai neril vanthaal
Anbinai alli thanthaal
Gopuram kannil kandaen
Konjidum kalasam kandaen
Female : Deva…..en deva…..
Male : Devi…….en devi……

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தேவி….ஈ…..ஈ…..
பெண் : தேவா…ஆ…ஆ….
ஆண் : தேவி………

ஆண் : அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி…..என் தேவி…

பெண் : ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தித் தட்டும் வைத்தேன்
ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தித் தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியைக் காண வைத்தேன்
தேவா…..என் தேவா

பெண் : ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தித் தட்டும் வைத்தேன்

ஆண் : பூவிலே பூஜை செய்வேன்
காதிலே வேதம் சொல்வேன்
பூவிலே பூஜை செய்வேன்
காதிலே வேதம் சொல்வேன்
ஆயிரம் குடங்கள் கொண்டு
அபிஷேகம் நடத்தி வைப்பேன்

பெண் : சாத்துப்படி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்
சாத்துப்படி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்

பெண் : அர்த்த ஜாமம் வரையில்
அம்மனைக் காண வைப்பேன்
அர்த்த ஜாமம் வரையில்
அம்மனைக் காண வைப்பேன்
தேவா…..என் தேவா….

ஆண் : அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்

பெண் : பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
உல்லாச ஊர்வலத்தில்
உள்ளத்தை மயங்க வைப்பேன்

ஆண் : கோயிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
கோயிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
தேவனின் நிலையில் நின்று
தேவியைத் தழுவிக் கொள்வேன்
தேவி….என் தேவி…

ஆண் : அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
பெண் : தேவா என் தேவா….
ஆண் : தேவி.. என் தேவி…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here