Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male : Ongaara roopini aangaara mogini
Ukkrama kaali neeyae
Chorus : Aamaa
Male : Reengara naadham nee sringaara maadhu nee en
Nenjooril vaazhum thaayae
Chorus : Aamaa

All : Ambigaiye muthumariamma
Unnai nambhi vandhom oru kaariyama
Ambigaiye Muthumariamma
Unnai nambhi vandhom oru kaariyama

All : Aalai vilungi yeppam idum
Kalamkaalama kaaliyamma
Ezhai engal nilamaiyai thaan
Eduthu solrom kelum amma

All : Samayapurathu magamaayi sagala ulaga maakkali
Kannapurathu mahamaayi kaanchipurathu kaamatchi

All : Kuraigal theera kodumaigal maara
Karunai kannal paarum amma
Kumbidu podum ezhai engal
Kudumba vazha venum amma

All : Ambigaiye muthumariamma
Unnai nambhi vandhom oru kaariyama

Female : Inbam endru solla kettadhundu
Adhu enga veetu pakkam vandhadhunda..aaaa..aaa

Chorus : Inbam endru solla kettadhundu
Adhu enga veetu pakkam vandhadhunda
Female : Panbum anbum nirainjirukkudhu
Panam adhai kandu odhungi nikkudhu
Chorus : Panbum anbum nirainjirukkudhu
Panam adhai kandu odhungi nikkudhu

Male : Thunbam vandhengalai sondham kondaadudhu
Soozhnilaiyum adhukku rombha thunaiyaaguthu..haa..aaa.aa
Chorus : Soozhnilaiyum adhukku rombha thunaiyaaguthu
Female : Soodhukaarar thottililae kaadhum kannum kettu
Nalla needhiyadhu kuzhandhai pola urangudhamma
All : Adhai ninaikaiyile makkal manadhu kalangudhamma
Kaasi visalaatchi kanya kuruchi vadivalaghi
Pechi sadachi periyaatchi
Kaatchi kodukkum meenatchi

Female : Kuraigal theera kodumaigal maara
Karunai kannaal paaramma
All : Kumbidu podum ezhai engal
Kudumbam vazha venumamma

All : Ambigaiye muthumariamma
Unnai nambhi vandhom oru kaariyama

Female : Therinju nadakkum soozhchigalai kandu unmai
Olinju marainju vaazhudhamma
Indru paninju nadakkum eliyavaridam
Pasiyum piniyum pandhayampodudhu

Male : Konjam yemaandhaal vannnjam theerkka pakkudhu
Thajamamma ulaga nilai idhu thanamma
Chorus : Amma thajamamma ulaga nilai idhu thanamma

All : Thevaikettra vagaiyil unnai
Pottrugirom thootrugirom
Theerpalithu kaappathuundhan thiramai amma
Un thiruvadiyai panivadhengal kadamai amma

All : Akkini kaali bathrakaali andhara kaali
Udhirakaali nadanakaali sudalai kaali
Female : Kuraigal theera kodumaigal maara
Karunai kannaal paaramma

All : Kumbidu podum ezhai engal
Kudumbam vazha venumamma

All : Ambigaiye muthumariamma
Unnai nambhi vandhom oru kaariyama
Ambigaiye muthumariamma
Unnai nambhi vandhom oru kaariyama

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஆண் : ஓங்கார ரூபிணி ஆங்கார மோகினி
உக்ரமா காளி நீயே
குழு : ஆமா
ஆண் : ரீங்கார நாதம் நீ ஸ்ருங்கார மாது நீ என்
நெஞ்சூரில் வாழும் தாயே!
குழு : ஆமா

அனைவரும் : அம்பிகையே முத்து மாரியம்மா
உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா
அம்பிகையே முத்து மாரியம்மா
உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா

அனைவரும் : ஆளை விழுங்கி ஏப்பமிடும்
காலமம்மா காளியம்மா
ஏழை எங்கள் நிலைமையைத்தான்
எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா

அனைவரும் : சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி
கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி

அனைவரும் : குறைகள் தீரக் கொடுமைகள் மாற
கருணைக் கண்ணால் பாருமம்மா!
கும்பிடு போடும் ஏழை எங்கள்
குடும்பம் வாழ வேணுமம்மா

அனைவரும் : அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை
நம்பி வந்தோம் ஒரு காரியமா

பெண் : இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு
அது எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா
குழு : இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு
அது எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா
பெண் : பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது
குழு : பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது

ஆண் : துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது
சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது
குழு : சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது
பெண் : சூதுக்காரர் தொட்டிலிலே காதும் கண்ணும் கெட்டு
நல்ல நீதியது குழந்தை போல உறங்குதம்மா
அனைவரும் : அதை நினைக்கையிலே மக்கள் மனது கலங்குதம்மா
காசி விசலாட்சி கன்யா குறிச்சி வடிவழகி
பேச்சி சடச்சி பெரியாட்சி
காட்சி கொடுக்கும் மீனாட்சி

பெண் : குறைகள் தீரக் கொடுமைகள் மாற
கருணைக் கண்ணால் பாருமம்மா!
அனைவரும் : கும்பிடு போடும் ஏழை எங்கள்
குடும்பம் வாழ வேணுமம்மா

அனைவரும் : அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை
நம்பி வந்தோம் ஒரு காரியமா

பெண் : தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு உண்மை
ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா
இன்று பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்
பசியும் பிணியும் பந்தயம் போடுது!

ஆண் : கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப் பாக்குது
தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா
குழு : அம்மா தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா

அனைவரும் : தேவைக்கேற்ற வகையில் உன்னை
போற்றுகிறோம் தூற்றுகிறோம்!
தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா
உன் திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!

அனைவரும் : அக்கினிக் காளி பத்திரக்காளி அந்தரக்காளி
உதிரக்காளி நடனக்காளி சுடலைக்காளீ!

பெண் : குறைகள் தீரக் கொடுமைகள் மாற
கருணைக் கண்ணால் பாருமம்மா

அனைவரும் : கும்பிடுபோடும் ஏழை எங்கள்
குடும்பம் வாழ வேணுமம்மா

அனைவரும் : அம்பிகையே முத்து மாரியம்மா
உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா
அம்பிகையே முத்து மாரியம்மா
உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here