Singers : Sai Baba, M. R. Vijaya and Jayaraman

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Amma appa sandaiyilae
Anaathai aanom pillaigalae
Amma appa sandaiyilae
Anaathai aanom pillaigalae

Male : Summaayirukka mudiyallae
Male : Saerththu vaikkavum vazhiyillae
Male : Summaayirukka mudiyallae
Male : Saerththu vaikkavum vazhiyillae
Female : Amma
Male : Appa

Female : Amma appa sandaiyilae
Anaathai aanom pillaigalae
Male : Summaayirukka mudiyallae
Male : Saerththu vaikkavum vazhiyillae
Female : Vazhiyillae
Male : Vazhiyillae
Female : Vazhiyillae

Chorus : Amma…pasi appa pasi pasiyo pasi….

Female : Pozhuthu vidinjaa coffee kodukka
Amma vendaama
Naama azhuthu vadinjaa kaasu kodukka
Appa vendaama

Male : Appa sutta idlythanilae
Uppae irukaathu
Appa sutta idlythanilae
Uppae irukaathu

Male : Ada amma namakku marunthu tharaatti
Udambae irukkaathu
Chorus : Udambae irukkaathu
Amma pasi appa pasi pasiyo pasi….

Female : Oorukkullae sandai
Nadanthaa appa vakkeelu
Male : Udambukkullae sandai
Nadanthaa amma vakkeelu

Male : Amma appa sandai pidiththaa
Yaarthaan vakkeelu
Female : Adhai theerththu vaikkavum
Saerththu vaikkavum naamthaan vakkeelu
Chorus : Naamthaan vakkeelu
Amma pasi appa pasi pasiyo pasi….

Female : Mookku nuniyilae kobam
Mulaichchu mookkae rendaachchu
Naakku nuniyil vaarththai
Thadichchu pechae ninnaachchu

Male : Bat-kkum panthu-kkum virotham
Vanthaa panthayam ennaagum
Vettikkum podavaikkum
Potti irunthaa veedae kaadaagum

Female : Perukku munnae intial poda
Appaa vendaamo
Perukku munnae intial poda
Appaa vendaamo

Female : Namma peththava yaarunnu
Maththava kettaa amma vendaamo
Chorus : Solla amma vendaamo
Amma pasi appa pasi pasiyo pasi….

பாடகர்கள் : சாய்பாபா, எம். ஆர். விஜயா மற்றும் ஜெயராமன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அம்மா அப்பா சண்டையிலே
அனாதை ஆனோம் பிள்ளைகளே
அம்மா அப்பா சண்டையிலே
அனாதை ஆனோம் பிள்ளைகளே

ஆண் : சும்மாயிருக்க முடியல்லே
ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
ஆண் : சும்மாயிருக்கவும் முடியல்லே
ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
பெண் : அம்மா….
ஆண் : அப்பா

பெண் : அம்மா அப்பா சண்டையிலே
அனாதை ஆனோம் பிள்ளைகளே
ஆண் : சும்மாயிருக்க முடியல்லே
ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
பெண் : வழியில்லே
ஆண் : வழியில்லே
பெண் : வழியில்லே…..

குழு : அம்மா….பசி அப்பா….பசி பசியோ பசி….

பெண் : பொழுது விடிஞ்சா காபி கொடுக்க
அம்மா வேண்டாமா
நாம அழுது வடிஞ்சா காசு கொடுக்க
அப்பா வேண்டாமா

ஆண் : அப்பா சுட்ட இட்லிதனிலே
உப்பே இருக்காது
அப்பா சுட்ட இட்லிதனிலே
உப்பே இருக்காது

ஆண் : அட அம்மா நமக்கு மருந்து தராட்டி
உடம்பே இருக்காது
குழு : உடம்பே இருக்காது
அம்மா….பசி அப்பா….பசி பசியோ பசி..

பெண் : ஊருக்குள்ளே சண்டை
நடந்தா அப்பா வக்கீலு
ஆண் : உடம்புக்குள்ளே சண்டை
நடந்தா அம்மா வக்கீலு

ஆண் : அம்மா அப்பா சண்டை பிடித்தா
யார் தான் வக்கீலு
பெண் : அதை தீர்த்து வைக்கவும்
சேர்த்து வைக்கவும் நாம்தான் வக்கீலு
குழு : நாம்தான் வக்கீலு
அம்மா….பசி அப்பா….பசி பசியோ பசி…..

பெண் : மூக்கு நுனியிலே கோபம்
முளைச்சு மூக்கே ரெண்டாச்சு
நாக்கு நுனியில் வார்த்தை
தடிச்சு பேச்சே நின்னாச்சு

ஆண் : பேட்டுக்கும் பந்துக்கும் விரோதம்
வந்தா பந்தயம் என்னாகும்
வேட்டிக்கும் பொடவைக்கும்
போட்டி இருந்தா வீடே காடாகும்

பெண் : பேருக்கு முன்னே இனிஷியல் போட
அப்பா வேண்டாமோ
பேருக்கு முன்னே இனிஷியல் போட
அப்பா வேண்டாமோ

பெண் : நம்ம பெத்தவ யாருன்னு
மத்தவ கேட்டா அம்மா வேண்டாமோ
குழு : சொல்ல அம்மா வேண்டாமோ
அம்மா….பசி அப்பா….பசி பசியோ பசி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here