Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Male : Ammaadi chinna ponnu ananthamthaanae
Sammatham kettu vittaen saamiyidam naanae
Maalai iduvaen ini poo mudippaen
Manthiraththaalae oru medai amaippaen

Female : Ammaadi chinna raja ananthamthaanae
Sammatham solli vittaen unnidam naanae
Maalai iduvaen ini poo mudippaen
Manthiraththaalae oru medai amaippaen

Both : Ammaadi chinna raja ananthamthaanae

Male : Kaveri thanneer meethu karaiyaerum meenai polae
Kadhalil moozhgi vittaen kannaana kannae
Female : Kannadi kannam rendum kalyaana seithi kettu
Kaniyaaga maaruthaiyyaa kannaana kannaa

Male : Maapillai oorvalaiththai maalaiyil nadaththu
Female : Mangala kolamittu mangaiyai anaiththu
Both : Maalaiyiduvaen ini poo mudipaen
Manthiraththaalae oru medai amaippaen

Both : Ammaadi chinna raja ananthamthaanae

Male : Poomalli thottamundu ponmanjal kannam undu
Poojaikku neram kandean kannaana kannaa
Female : Thaerodu neram undu singaara dheepam undu
Thirunaalai thedugindren kannaana kannae

Female : Kannukkul unnai kandu kaviyam padiththu
Male : Kattaana meanithannai aasaiyil anaiththu
Both : Maalaiyiduvaen ini poo mudippaen
Manthiraththaalae oru medai amaippaen

Both : Ammaadi chinna raja ananthamthaanae
Laalaal laalaal laallaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அம்மாடி சின்னப்பொண்ணு ஆனந்தம்தானே
சம்மதம் கேட்டு விட்டேன் சாமியிடம் நானே
மாலை இடுவேன் இனி பூ முடிப்பேன்
மந்திரத்தாலே ஒரு மேடை அமைப்பேன்

பெண் : அம்மாடி சின்ன ராஜா ஆனந்தம்தானே
சம்மதம் சொல்லி விட்டேன் உன்னிடம் நானே
மாலை இடுவேன் இனி பூ முடிப்பேன்
மந்திரத்தாலே ஒரு மேடை அமைப்பேன்

இருவர் : அம்மாடி சின்ன ராஜா ஆனந்தம்தானே

ஆண் : காவேரி தண்ணீர் மீது கரையேறும் மீனைப் போலே
காதலில் மூழ்கி விட்டேன் கண்ணான கண்ணே
பெண் : கண்ணாடி கன்னம் ரெண்டும் கல்யாண செய்தி கேட்டு
கனியாக மாறுதைய்யா கண்ணான கண்ணா

ஆண் : மாப்பிள்ளை ஊர்வலத்தை மாலையில் நடத்து
பெண் : மங்கள கோலமிட்டு மங்கையை அணைத்து
இருவர் : மாலையிடுவேன் இனி பூ முடிப்பேன்
மந்திரத்தாலே ஒரு மேடை அமைப்பேன்

இருவர் : அம்மாடி சின்ன ராஜா ஆனந்தம்தானே

பெண் : பூமல்லி தோட்டமுண்டு பொன்மஞ்சள் கன்னம் உண்டு
பூஜைக்கு நேரம் கண்டேன் கண்ணான கண்ணா
ஆண் : தேரோடு நேரம் உண்டு சிங்கார தீபம் உண்டு
திருநாளை தேடுகின்றேன் கண்ணான கண்ணே

பெண் : கண்ணுக்குள் உன்னைக் கண்டு காவியம் படித்து
ஆண் : கட்டான மேனிதன்னை ஆசையில் அணைத்து
இருவர் : மாலையிடுவேன் இனி பூ முடிப்பேன்
மந்திரத்தாலே ஒரு மேடை அமைப்பேன்

இருவர் : அம்மாடி சின்ன ராஜா ஆனந்தம்தானே
லாலால் லாலல் லால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here