Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Ammammaa….
Idhayam eriyum
Kodumai nadandhadhae…
Poo maalai…
Kanalil vizhundhu
Karugi ponadhae…
Theeyodu theeyaagi
Theendhaayae… ammammaa…

Male : Eriyum sidhaiyilae
Nilavum karugavae
Thanimai chiraiyilae
Manadhum urugavae
Anbu nenjamae
Ingu analil vegudhae
Thunbam ondru thaan
En sondham aanadhae
Kanavugal thaan kalaindhidavae
Pudhu malar thaan posungiyadhae

Male : Eriyum sidhaiyilae
Nilavum karugavae
Thanimai chiraiyilae
Manadhum urugavae
Anbu nenjamae
Ingu analil vegudhae
Thunbam ondru thaan
En sondham aanadhae

Male : Sor ootti paathirundhu
Sondham yena aadharitha
Thaayavalum thee kondaal
Enna sadhiyo

Male : Thaalaatta thaayum indri
Solli azha yaarum indri
Yengi azhudhae ingae
Ezhai kiliyae

Male : Oliyae maraindhae kidakka
Ulagae irulil thavikka
Adimai uyir thaan malivaa
Vidivae yemakku illaiyaa
Vizhiyil theriyum vidivae
Adhu dhinamum theriyum mudivae
Ingu vedithidum neruppinil
Kodumaigal erindhidumae

Male : Eriyum sidhaiyilae
Nilavum karugavae
Thanimai chiraiyilae
Manadhum urugavae
Anbu nenjamae
Ingu analil vegudhae
Thunbam ondru thaan
En sondham aanadhae

Male : Aandaandu kaalam ingu
Adimai yena vaazhndhadhellaam
Naalai mudhalae
Ingae maari vidalaam

Male : Vaadhaadi paarthadhellaam
Veenaaga ponadhenna
Vaalai eduthaal ingae
Needhi peralaam

Male : Thunivae thunaiyaai ini vaa
Puliyaai ezhuvaai manidhaa
Thadaiyae thagarum iniyae
Dharumam jeyikkum nijamae

Male : Kodumai chiraiyum udaikka
Ooru sabadham yedutthu varuvaen
Ini vidindhidum pozhudhugal
Namakkena vidiyattumae

Male : Eriyum sidhaiyilae
Nilavum karugavae
Thanimai chiraiyilae
Manadhum urugavae
Anbu nenjamae
Ingu analil vegudhae
Thunbam ondru thaan
En sondham aanadhae
Kanavugal thaan kalaindhidavae
Pudhu malar thaan posungiyadhae

பாடகர் : மலேசிய வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அம்மம்மா……
இதயம் எரியும் கொடுமை நடந்ததே…
பூ மாலை
கனலில் விழுந்து கருகிப் போனதே…
தீயோடு தீயாகித் தீந்தாயே…
அம்மம்மா…

ஆண் : எரியும் சிதையிலே
நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே
மனதும் உருகவே

ஆண் : அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே

ஆண் : கனவுகள்தான் கலைந்திடவே
புது மலர்தான் பொசுங்கியதே

ஆண் : எரியும் சிதையிலே
நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே
மனதும் உருகவே

ஆண் : அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே

ஆண் : சோறூட்டிப் பார்த்திருந்து
சொந்தம் என ஆதரித்த
தாயவளும் தீ கொண்டாள்
என்ன சதியோ

ஆண் : தாலாட்ட தாயும் இன்றி
சொல்லி அழ யாரும் இன்றி
ஏங்கி அழுதே இங்கே
ஏழைக் கிளியே

ஆண் : ஒளியே மறைந்தே கிடக்க
உலகே இருளில் தவிக்க
அடிமை உயிர் தான் மலிவா
விடிவே எமக்கு இல்லையா

ஆண் : விழியில் தெரியும் விடிவே
அது தினமும் எழுதும் முடிவே
இங்கு வெடித்திடும் நெருப்பினில்
கொடுமைகள் எரிந்திடுமே

ஆண் : எரியும் சிதையிலே
நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே
மனதும் உருகவே

ஆண் : அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே

ஆண் : ஆண்டாண்டு காலம் இங்கு
அடிமை என வாழ்ந்ததெல்லாம்
நாளை முதலே
இங்கே மாறி விடலாம்

ஆண் : வாதாடிப் பார்த்ததெல்லாம்
வீணாகப் போனதென்ன
வாளை எடுத்தால்
இங்கே நீதி பெறலாம்

ஆண் : துணிவே துணையாய் இனி வா
புலியாய் எழுவாய் மனிதா
தடையே தகரும் இனியே
தருமம் ஜெயிக்கும் நிஜமே

ஆண் : கொடுமைச் சிறையும் உடைக்க
ஒரு சபதம் எடுத்து வருவேன்
இனி விடிந்திடும் பொழுதுகள்
நமக்கென விடியட்டுமே….ஏ…..

ஆண் : எரியும் சிதையிலே
நிலவும் கருகவே
தனிமைச் சிறையிலே
மனதும் உருகவே

ஆண் : அன்பு நெஞ்சமே
இங்கு அனலில் வேகுதே
துன்பம் ஒன்றுதான்
என் சொந்தம் ஆனதே

ஆண் : கனவுகள்தான் கலைந்திடவே
புது மலர்தான் பொசுங்கியதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here