Singer : Pushpalatha

Music by : M. S. Viswanathan

Female : Ammaavum appaavum vellai poonaial
Avargalin magal naan chinna poonai
Ammaavum appaavum vellai poonaial
Avargalin magal naan chinna poonai
Ennathaan avargal sandai podattum
Ennathaan avargal sandai podattum
Adhu viraivinil samarasam aagividum

Female : Ammaavum appaavum vellai poonaial
Avargalin magal naan chinna poonai

Female : Thaayin manamo roja poo
En thanthai gunamo perum neruppu
Thaayin manamo roja poo
En thanthai gunamo perum neruppu
Roja poo neruppinil vizhunthathillai
Antha neruppum adhanai erinthathillai

Female : Ammaavum appaavum vellai poonaial
Avargalin magal naan chinna poonai

Female : Arasanai kandaal rajangam
Oru aandiyai kandaal sanyaasam
Arasanai kandaal rajangam
Oru aandiyai kandaal sanyaasam
Kadhaigalai polae maariduvaar
Avar kanavinil thaanae vaazhugindraar

Female : Mamavin manasu vellai manasu
Maranthum adhilae kalangamillai

Female : Oorukku avaro komaali
Intha uravukku avaro yaemaali
Oorukku avaro komaali
Intha uravukku avaro yaemaali
Naalaikku avarthaan medhaavi
En naakkinil solpaval sridevi

Female : Mamavin manasu vellai manasu
Maranthum adhilae kalangamillai

Female : Ammaavum appaavum vellai poonaial
Avargalin magal naan chinna poonai

பாடகி : புஷ்பலதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை
என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும்
என்னதான் அவர்கள் சண்டைப் போடட்டும்
அது விரைவினில் சமரசம் ஆகிவிடும்

பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை

பெண் : தாயின் மனமோ ரோஜாப்பூ
என் தந்தை குணமோ பெரும் நெருப்பு
தாயின் மனமோ ரோஜாப்பூ
என் தந்தை குணமோ பெரும் நெருப்பு
ரோஜாப்பூ நெருப்பினில் விழுந்ததில்லை
அந்த நெருப்பும் அதனை எரித்ததில்லை

பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை

பெண் : அரசனைக் கண்டால் ராஜாங்கம்
ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம்
அரசனைக் கண்டால் ராஜாங்கம்
ஒரு ஆண்டியைக் கண்டால் சன்யாசம்
கதைகளைப் போலே மாறிடுவார்
அவர் கனவினில் தானே வாழுகின்றார்

பெண் : மாமாவின் மனசு வெள்ளை மனசு
மறந்தும் அதிலே களங்கமில்லை

பெண் : ஊருக்கு அவரோ கோமாளி
இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
ஊருக்கு அவரோ கோமாளி
இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
நாளைக்கு அவர்தான் மேதாவி
என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி

பெண் : மாமாவின் மனசு வெள்ளை மனசு
மறந்தும் அதிலே களங்கமில்லை

பெண் : அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்
அவர்களின் மகள் நான் சின்னப் பூனை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here