Singer : P. Susheela

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Amma vedhanai kaatchiyae
Vizhi kaanavillaiyoo
Sodhanai yen amma
Amirthavarshini..amirthavarshini

Female : Amudhae odi vaa
Amudhae odi vaa
Vaan amudhae odi vaa
Amaidhi soozha ulagam vaazha arul mazhai
Amudhae odi vaa

Female : Mannan needhiyil maaruvadhalae
Vaanum vanjanai seidhidalaamoo
Mannan needhiyil maaruvadhalae
Vaanum vanjanai seidhidalaamoo
Enna tholaiyaa ezhai maandhargal
Yengi vaadudhal podhadho

Female : Amudhae odi vaa
Vaan amudhae odi vaa

Female : Nallavar vaazha peidhidum mazhaiyaal
Nallavar vaazha peidhidum mazhaiyaal
Naadum vaazhndhidum enbathum poiyoo
Nellum valamum niraiya seivadhu
Neer illamal veredhu

Female : Amudhae odi vaa

Female : Uzhavor adaintha thuyaraal varunthi
Venmegam maeni karukkave
Mazhai neer sumandha mugilae kavindhu
Adi vaanamengum nerukkavae

Female : Vizhipola minnal thirakkavae
Idiyosai vinnil muzhakkave
Sezhikkavae puvikkellam
Mazhai muthin thuli sindha magizhvodu

Female : Amudhae odi vaa
Amudhae odi vaa
Vaan amudhae odi vaa
Odi vaa ..odi vaa.. odi vaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : அம்மா வேதனைக் காட்சியே
விழிக் காணவில்லையோ
சோதனை ஏனம்மா
அமிர்தவர்ஷிணி…….அமிர்தவர்ஷிணி…….

பெண் : அமுதே ஓடிவா
அமுதே ஓடிவா
வானமுதே ஓடி வா
அமைதி சூழ உலகம் வாழ அருள்மழை
அமுதே ஓடிவா

பெண் : மன்னன் நீதியில் மாறுவதாலே
வானும் வஞ்சனை செய்திடலாமோ
மன்னன் நீதியில் மாறுவதாலே
வானும் வஞ்சனை செய்திடலாமோ
எண்ணத் தொலையா ஏழை மாந்தர்கள்
ஏங்கி வாடுதல் போதாதோ…….

பெண் : அமுதே ஓடிவா
வானமுதே ஓடி வா

பெண் : நல்லவர் வாழப் பெய்திடும் மழையால்
நல்லவர் வாழப் பெய்திடும் மழையால்
நாடும் வாழ்ந்திடும் என்பதும் பொய்யோ
நெல்லும் வளமும் நிறையச் செய்வது
நீரில்லாமல் வேறேது……..

பெண் : அமுதே ஓடிவா

பெண் : உழவோரடைந்த துயரால் வருந்தி
வெண்மேகம் மேனி கருக்கவே
மழைநீர் சுமந்த முகிலே கவிந்து
அடிவானமெங்கும் நெருக்கவே

பெண் : விழிபோல மின்னல் திறக்கவே
இடியோசை விண்ணில் முழக்கவே
செழிக்கவே புவிக்கெல்லாம்
மழை முத்தின் துளி சிந்த மகிழ்வோடு

பெண் : அமுதே ஓடிவா
அமுதே ஓடிவா
வானமுதே ஓடி வா
ஓடி வா ஓடி வா ஓடி வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here