Singers : Mano and K. S. Chitra

Music by : Chandrabose

Male : Anbe thilagam azhagae thilagam
Endrum neethaan enthan ulagam
Female : Naayagan neeyoru veerathilagam
Intha naayagi nee konjum vanjith thilagam

Male : Aahaa naan thanthu ne vaiththa netriththilagam
Entha naalum en vaazhvukku vetri thilagam

Female : Anbin thilagam panbin thilagam
Endrum neethaan enthan ulagam

Female : Lala laa lala laa….aaa….
Aaa…..aa….la lala laa….
Male : Aaa…..

Male : Niram maari vidum pookkal
Maranthodi vidum naatkal
Maaraatha maraiyaatha thilagam idhu
Female : Nilam vaanam ulla kaalam
Nizhal pola unnai naalum
Neengaatha uravaadum idhayam idhu

Male : Azhagaana aalayam nam naadu
Adhil vaazhum ambigai nee
Female : Dhinanthorum dhevanin per solli
Manam paadum keerthanaiyae
Male : Shruthiyodu layam pola
Saernthaen naanthaanae

Female : Anbin thilagam panbin thilagam
Male : Endrum neethaan enthan ulagam

Female : Tamil Moondru vagaiyaagum
Adhai pola ingu naamum
Naan ondru nee ondru magan ondruthaan
Male : Namai saernthoru pillai
Nadai pottu varum killai
Maganalla manam veesum malar senduthaan

Female : Pirai polae pillaiyum valarnthaalae
Varungaalam pournamiyaagum
Male : Orupothum theipirai kaanaathu
Ulavum nam vennilavu
Female : Magan vaazha manai vaazha
Paadum poongaattru

Male : Anbe thilagam azhagae thilagam
Endrum neethaan enthan ulagam
Female : Naayagan neeyoru veerathilagam
Intha naayagi nee konjum vanjith thilagam

Male : Aahaa naan thanthu ne vaiththa netriththilagam
Entha naalum en vaazhvukku vetri thilagam

Female : Anbin thilagam panbin thilagam
Endrum neethaan enthan ulagam

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : அன்பே திலகம் அழகே திலகம்
என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண் : நாயகன் நீயொரு வீரத்திலகம்
இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம்

ஆண் : ஆஹா நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம்
எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம்

பெண் : அன்பின் திலகம் பண்பின் திலகம்
என்றும் நீதான் எந்தன் உலகம்

பெண் : லல லா லல லா…..ஆஅ…
ஆஅ…..ஆ…… லா லல லா
ஆண் : ஆஅ……..

ஆண் : நிறம் மாறி விடும் பூக்கள்
மறைந்தோடி விடும் நாட்கள்
மாறாத மறையாத திலகம் இது
பெண் : நிலம் வானம் உள்ள காலம்
நிழல் போல உன்னை நாளும்
நீங்காத உறவாடும் இதயம் இது

ஆண் : அழகான ஆலயம் நம் வீடு
அதில் வாழும் அம்பிகை நீ
பெண் : தினந்தோறும் தேவனின் பேர் சொல்லி
மனம் பாடும் கீர்த்தனையே
ஆண் : ஸ்ருதியோடு லயம் போல
சேர்ந்தேன் நான்தானே

பெண் : அன்பின் திலகம் பண்பின் திலகம்
ஆண் : என்றும் நீதான் எந்தன் உலகம்

பெண் : தமிழ் மூன்று வகையாகும்
அதைப் போல இங்கு நாமும்
நான் ஒன்று நீ ஒன்று மகன் ஒன்றுதான்
ஆண் : நமை சேர்ந்ததொரு பிள்ளை
நடைப் போட்டு வரும் கிள்ளை
மகனல்ல மணம் வீசும் மலர்ச்செண்டுதான்

பெண் : பிறை போலே பிள்ளையும் வளர்ந்தாலே
வருங்காலம் பௌர்ணமியாகும்
ஆண் : ஒருபோதும் தேய்பிறை காணாது
உலவும் நம் வெண்ணிலவு
பெண் : மகன் வாழ மனை வாழ
பாடும் பூங்காற்று

ஆண் : அன்பே திலகம் அழகே திலகம்
என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண் : நாயகன் நீயொரு வீரத்திலகம்
இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம்

ஆண் : ஆஹாஹ நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம்
எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம்
பெண் : அன்பின் திலகம் பண்பின் திலகம்
ஆண் : என்றும் நீதான் எந்தன் உலகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here