Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Anbu deivam nee
Engal annai vadivam nee
Azhaippai neeyae amma amma endru

Female : Anbu deivam nee
Engal annai vadivam nee

Female : Kaamathenu karpagam neeye
Kodhaiyar vanagum kulamagal neeye
Kaamathenu karpagam neeye
Kodhaiyar vanagum kulamagal neeye

Female : Anbu deivam nee
Engal annai vadivam nee
Azhaippai neeyae amma amma endru

Female : Anbu deivam nee
Engal annai vadivam nee

Female : Panpaal anbaal paasathin pinaipaal
Pasuve nee tharum paal
Panpaal anbaal paasathin pinaipaal
Pasuve nee tharum paal

Female : Un paal ulagai urugida seiyyum
Penn paal nee ena pesida seiyum
Un paal ulagai urugida seiyyum
Penn paal nee ena pesida seiyum

Female : Pasuvukku pennum pennukku pasuvum
Pantham thirumagalae
Intha ponnukku pasuvum pasuvukku pennum
Sontham kulamagale

Female : Anbu deivam nee
Engal annai vadivam nee
Azhaippai neeyae amma amma endru

Female : Anbu deivam nee
Engal annai vadivam nee

Female : Innaar valarththaar enbathai arivaai
Vanthaal mugam tharuvaai
Innaar valarththaar enbathai arivaai
Vanthaal mugam tharuvaai

Female : Kungumam ittu manjalum vaithom
Tharuma devathaiyae
Kovilai unthan maeniyil kandom
Devar kulamagalae

Female : Pasuvukku pennum pennukku pasuvum
Pantham thirumagalae
Intha ponnukku pasuvum pasuvukku pennum
Sontham kulamagale

Female : Anbu deivam nee
Engal annai vadivam nee
Azhaippai neeyae amma amma endru

Female : Anbu deivam nee
Engal annai vadivam nee

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று

பெண் : அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ

பெண் : காமதேனு கற்பகம் நீயே
கோதையர் வணங்கும் குலமகள் நீயே
காமதேனு கற்பகம் நீயே
கோதையர் வணங்கும் குலமகள் நீயே

பெண் : அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று

பெண் : அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ

பெண் : பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால்
பசுவே நீ தரும் பால்..
பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால்
பசுவே நீ தரும் பால்..

பெண் : உன் பால் உலகை உருகிடச் செய்யும்
பெண் பால் நீ எனப் பேசிடச் செய்யும்
உன் பால் உலகை உருகிடச் செய்யும்
பெண் பால் நீ எனப் பேசிடச் செய்யும்

பெண் : பசுவுக்குப் பெண்ணும் பெண்ணுக்குப் பசுவும்
பந்தம் திருமகளே
இந்தப் பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும்
சொந்தம் குலமகளே

பெண் : அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று

பெண் : அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ

பெண் : இன்னார் வளர்த்தார் என்பதை அறிவாய்
வந்தால் முகம் தருவாய்
இன்னார் வளர்த்தார் என்பதை அறிவாய்
வந்தால் முகம் தருவாய்

பெண் : வாழ்ந்தால் பாலும் மறைந்தால் தோலும்
அடுத்தொரு கன்றும் கொடுப்பவள் நீயே
வாழ்ந்தால் பாலும் மறைந்தால் தோலும்
அடுத்தொரு கன்றும் கொடுப்பவள் நீயே

பெண் : குங்குமம் இட்டு மஞ்சளும் வைத்தோம்
தருமத் தேவதையே
கோவிலை உந்தன் மேனியில் கண்டோம்
தேவர் குலமகளே

பெண் : பசுவுக்குப் பெண்ணும் பெண்ணுக்குப் பசுவும்
பந்தம் திருமகளே
இந்தப் பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும்
சொந்தம் குலமகளே

பெண் : அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று

பெண் : அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here