Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Kadhiravan ezhunthan kanairul agandrathu
Kadal alai meedhu nadanthathu kaatru
Paramporul naamam paadi parandhane pullinam….

Male : Anbu enum oru mandhiram podhum
Anbu enum oru mandhiram podhum
Aaruyir ellaam oruyir aagum
Aaruyir ellaam oruyir aagum
Vaanam nilam yaavum devan arul mevum

Male : Anbu enum oru mandhiram pothum…..

Male : Meethi vazhi naadi nadanthana ivan kaalgal
Naadhan mozhi yaavum nyaana vaaikaalgal
Meethi vazhi naadi nadanthana ivan kaalgal
Naadhan mozhi yaavum nyaana vaaikaalgal

Male : Seelam vazhuvaadha thuravaram kaaththaanae
Sinangalai ariyaatha sindhanai vaaithaanae

Male : Amaithiyai kaakkum azhagiye thottram
Arul malar pookkum arivenum thootam
Gurunaadhan arul vaazhagavae
Kulam yaavum nalam kaanave…

Male : Anbu enum oru mandhiram pothum…..

Male : Sethiram pala naadi thirumaalin isai paadi
Nethiram malarnthaano
Saathigal pirikathe samudhaya nalam koorum
Saathiram padaithaano

Male : Eazhayar eliyoram yaenaiya madhanthorum
Eazhayar eliyoram yaenaiya madhanthorum
Yaethidum pemmaanae
Raghavendhira sri raghavendhira
Chorus : Raghavendhira sri raghavendhira…..

Male : Anbu enum oru mandhiram podhum
Aaruyir ellaam oruyir aagum
Anbu enum oru mandhiram podhum

Male : Pesugindra deivam nee
Chorus : Raghavendhira
Male : Pethamatra nyani nee
Chorus : Raghavendhira
Male : Vazhukindra jeevan nee
Chorus : Raghavendhira
Male : Vaazha veika vendum nee
Chorus : Raghavendhira
Raghavendhira sri raghavendhira
Raghavendhira sri raghavendhira…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கதிரவன் எழுந்தான் கனையிருள் அகன்றது
கடல் அலை மீது நடந்தது காற்று
பரம்பொருள் நாமம் பாடி பறந்தன புள்ளினம்……..

ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
வானம் நிலம் யாவும் தேவன் அருள் மேவும்

ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்……

ஆண் : மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்
மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்

ஆண் : சீலம் வழுவாத துறவறம் காத்தானே
சினங்களை அறியாத சிந்தனை வாய்த்தானே

ஆண் : அமைதியை காக்கும் அழகிய தோற்றம்
அருள் மலர் பூக்கும் அறிவெனும் தோட்டம்
குருநாதன் அருள் வாழ்கவே
குலம் யாவும் நலம் காணவே…..

ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்

ஆண் : சேத்திரம் பல நாடி திருமாலின் இசை பாடி
நேத்திரம் மலர்ந்தானோ
சாதிகள் பிரிக்காத சமுதாய நலம் கூறும்
சாத்திரம் படைத்தானோ

ஆண் : ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏத்திடும் பெம்மானே
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
குழு : ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா……….

ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்

ஆண் : பேசுகின்ற தெய்வம் நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : பேதமற்ற ஞானி நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : வாழுகின்ற ஜீவன் நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : வாழ வைக்க வேண்டும் நீ
குழு : ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here