Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Thanthai pinnae sellugindraan
Thanaiyan kaikkatti
Thannai maranthu vaadugiraal
Kanni maankutti

Male : Ventha ullam irandu pakkam
Vivaram theriyaamal
Devan potta ellaikkottin
Vilakkam puriyaamal

Male : Kadhal ennum paadhai
Adhu kadavul podum saalai
Kadhal ennum paadhai
Adhu kadavul podum saalai
Ellai kodugal engae
Athai iraivan sonnaan ingae

Male : Anbu kondu paarppatharkku
Kangal ellaikkodu
Aasai ennum dheepam yaettra
Ullam ellaikkodu
Ullam ellaikkodu

Male : Ennam yaavum ingae
Adhan ellaikkodugal engae
Vanna puruvam ingae
Adhan vaazhvum thaazhvum engae

Male : Vidhi enbaargal silaper
Seitha vinai enbaargal silaper
Edhu endraalum sarithaan
Idhan ellai pottavan iraivan

Male : Vidhi enbaargal silaper
Seitha vinai enbaargal silaper
Edhu endraalum sarithaan
Idhan ellai pottavan iraivan

Male : Irandu ullam serumpothu
Inbam ellaikkodu
Iraivan vanthu pirikkumpothu
Kanneer ellaikkodu

Male : Anbu kondu paarppatharkku
Kangal ellaikkodu
Aasai ennum dheepam yaettra
Ullam ellaikkodu
Ullam ellaikkodu

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தந்தை பின்னே செல்லுகின்றான்
தனையன் கைக்கட்டி……
தன்னை மறந்து வாடுகிறாள்
கன்னி மான்குட்டி

ஆண் : வெந்த உள்ளம் இரண்டு பக்கம்
விவரம் தெரியாமல்
தேவன் போட்ட எல்லைக்கோட்டின்
விளக்கம் புரியாமல்

ஆண் : காதல் என்னும் பாதை
அது கடவுள் போடும் சாலை
காதல் என்னும் பாதை
அது கடவுள் போடும் சாலை
எல்லைக் கோடுகள் எங்கே
அதை இறைவன் சொன்னான் இங்கே

ஆண் : அன்பு கொண்டு பார்ப்பதற்கு
கண்கள் எல்லைக்கோடு
ஆசை என்னும் தீபம் ஏற்ற
உள்ளம் எல்லைக்கோடு
உள்ளம் எல்லைக்கோடு

ஆண் : எண்ணம் யாவும் இங்கே
அதன் எல்லைக்கோடுகள் எங்கே
வண்ணப் புருவம் இங்கே
அதன் வாழ்வும் தாழ்வும் எங்கே

ஆண் : விதி என்பார்கள் சிலபேர்
செய்த வினை என்பார்கள் சிலபேர்
எது என்றாலும் சரிதான்
இதன் எல்லை போட்டவன் இறைவன்

ஆண் : விதி என்பார்கள் சிலபேர்
செய்த வினை என்பார்கள் சிலபேர்
எது என்றாலும் சரிதான்
இதன் எல்லை போட்டவன் இறைவன்

ஆண் : இரண்டு உள்ளம் சேரும்போது
இன்பம் எல்லைக்கோடு
இறைவன் வந்து பிரிக்கும்போது
கண்ணீர் எல்லைக்கோடு…

ஆண் : அன்பு கொண்டு பார்ப்பதற்கு
கண்கள் எல்லைக்கோடு
ஆசை என்னும் தீபம் ஏற்ற
உள்ளம் எல்லைக்கோடு
உள்ளம் எல்லைக்கோடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here