Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Female : Anbulla appaa
Male : Ennappaa
Female : Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male : Appappaa pollaadha pennappaa

Female : Anbulla appaa
Male : Ennappaa
Female : Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male : Ahaahahaa pollaadha pennappaa

Female : M… ungalodadhu
Kaadhal kalyaanam thaanae

Male : Of course it was a love marriage

Female : Neenga ammaava
Paarthadhu eppodhu
Nyaabagam undaa ippodhu

Male : Mmm…hahaha
Mudhal muthathaiyum
Mudhal kaadhalaiyum
Marakka mudiyaadhu magalae
Avalai naan paarthadhu…
Malargal vandugalukku paetti kodukkum
Oottiyil oru malar kaatchiyil thaan…
Andha nandhavanathai chandhithaen

Female : Ammaa eppadi
Azhagaa irundhaangalaa
Male : Andha malar kaatchiyil
Azhagaana poovae
Aval mattum thaan
Pookkalellaam aval kanindha
Mugam kaana
Naani koni kunindhu kondana

Female : Ungal mana vaazhkkaiyil
Malarum ninaivugal undaa
Male : Naan thaaiyidam kooda
Paarthadhillai andha paasam
Aval ninaivugalae en swaasam

Female : Anbulla appaa
Male : Ennappaa
Female : Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male : Appappappappaa naughty girlappaa

Female : Appaa ammaa ungala
Nallaa gavanichikkittaangalaa

Male : Saelaiyil enadhu
Mugam thudaippaal
Naan sinunginaal
Chella adi koduppaal
Viralgalukkellaam
Sulukkeduppaal
En naga kannil kooda
Azhukkeduppaal

Male : Thaayaai
Avalai paarthadhundu
En thaadhiyaai
Avalai paarthadhundu
Oru thaen kudamaai
Avalai paarthadhundu…
But… aval urangi mattum
Naan paarthadhillai…

Female : Is it…
Ammaa urangi neenga
Paarthadhae illaiyaa

Male : Paarthaen magalae paarthaen
Paarthaen magalae paarthaen
Eppodhu aval kadaisi urakkam kolla
Kan moodinaalo appodhu thaan
Aval urangi naan paarthaen

Female : Appaa…
Male : Aam magalae…
Nee kan thirandhaai…
Aval kan maraindhaal…
En vaanathil… vidi velli ezhundhadhu…
Vennilavu… maraindhadhu…

பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : அன்புள்ள அப்பா
ஆண் : என்னப்பா
பெண் : உங்கள் காதல் கதையை
கேட்டால் தப்பா
ஆண் : அப்பபப்ப்பா பொல்லாத பெண்ணப்பா

பெண் : அன்புள்ள அப்பா
ஆண் : என்னப்பா
பெண் : உங்கள் காதல் கதையை
கேட்டால் தப்பா
ஆண் : அஹாஹஹா பொல்லாத பெண்ணப்பா

பெண் : ம்……உங்களோடது
காதல் கல்யாணந்தானே

பெண் : அப்கோர்ஸ் இட் வாஸ் எ
லவ் மேரேஜ்

பெண் : நீங்க அம்மாவ
பார்த்தது எப்போது
ஞாபகம் உண்டா இப்போது

ஆண் : ம்ம்ம்ம்…..ஹஹஹா
முதல் முத்தத்தையும்
முதல் காதலையும்
மறக்க முடியாது மகளே
அவளை நான் பார்த்தது
மலர்கள் வண்டுகளுக்கு
பேட்டிக் கொடுக்கும் ஊட்டியில்
ஒரு மலர் காட்சியில்தான் அந்த
நந்தவனத்தை சந்தித்தேன்

பெண் : அம்மா எப்படி
அழகா இருந்தாங்களா
ஆண் : அந்த மலர்க்காட்சியில்
அழகான பூவே
அவள் மட்டும்தானே
பூக்கள் எல்லாம் அவள் கனிந்த
முகம் காண
நாணிக் கோணி குனிந்துக் கொண்டன

பெண் : உங்கள் மண வாழ்க்கையில்
மலரும் நினைவுகள் உண்டா
ஆண் : நான் தாயிடம் கூடப்
பார்த்ததில்லை அந்தப் பாசம்
அவள் நினைவுகளே என் சுவாசம்

பெண் : அன்புள்ள அப்பா
ஆண் : என்னப்பா
பெண் : உங்கள் காதல் கதையை
கேட்டால் தப்பா
ஆண் : அப்ப்பப்பா நாட்டி கேர்ள்ளப்பா

பெண் : அப்பா அம்மா உங்களை
நல்லா கவனிச்சிக்கிட்டாங்களா

ஆண் : சேலையில் எனது
முகம் துடைப்பாள்
நான் சிணுங்கினால்
செல்ல அடிக் கொடுப்பாள்
விரல்களுக்கெல்லாம்
சுளுக்கெடுப்பாள்
என் நகக்கண்ணில் கூட
அழுக்கெடுப்பாள்

ஆண் : தாயாய்
அவளைப் பார்த்ததுண்டு
என் தாதியாய்
அவளைப் பார்த்ததுண்டு….
பட்…..அவள் உறங்கி மட்டும்
நான் பார்த்ததில்லை

பெண் : இஸ் ட்…..
அம்மா உறங்கி நீங்க
பார்த்ததே இல்லையா

ஆண் : பார்த்தேன் மகளே பார்த்தேன்
பார்த்தேன் மகளே பார்த்தேன்
எப்போது அவள் கடைசி உறக்கம் கொள்ளக்
கண் மூடினாளோ அப்போதுதான்
அவள் உறங்கி நான் பார்த்தேன்

பெண் : அப்பா………
ஆண் : ஆம் மகளே……
நீ கண் திறந்தாய்……
அவள் கண் மறைந்தாள்….
என் வானத்தில்….. விடி வெள்ளி எழுந்தது…..
வெண்ணிலவு….. மறைந்தது…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here