Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Panchu Arunachalam

Male : Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam
Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam

Female : Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam
Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam

Male : Nilavum malarum sirippum irundhadhu
Andha mugathinilae
Nilavum malarum sirippum irundhadhu
Andha mugathinilae
Perum neruppum kodhippum puyalum irukkudhu
Indha mugathinile
Perum neruppum kodhippum puyalum irukkudhu
Indha mugathinile

Female : Anbu kadamai thiyagam irundhadhu
Andha manadhinile
Anbu kadamai thiyagam irundhadhu
Andha manadhinile
Verum aathiram avasaram vegam irukkudhu
Indha manadhinile
Aathiram avasaram vegam irukkudhu
Indha manadhinile

Male : Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam

Female : Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam

Male : Atcham naanam maunam idhai thaan
Idhuvarai valarthu vandhaai
Atcham naanam maunam idhai thaan
Idhuvarai valarthu vandhaai
Indha mechum arivum pechum idhu varai
Engae maraithu vandhaai
Indha mechum arivum pechum idhu varai
Engae maraithu vandhaai

Female : Kaakkum imaiyil kaayam irundhaal
Kangal sivakaadha
Male : Ahaa
Female : Kaakkum imaiyil kaayam irundhaal
Kangal sivakaadha
Than kanavan porumai izhanthidum podhu
Kavalai pirakadha
Kanavan porumai izhanthidum podhu
Kavalai pirakadha

Male : Andha mugama indha mugam
Idhil endha mugam thaan sondha mugam

Female : Andha manama indha manam
Idhil endha manam thaan ungal manam

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

 பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

ஆண் : அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்

பெண் : அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..
அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..

ஆண் : நிலவும் மலரும் சிரிப்பும் இருந்தது
அந்த முகத்தினிலே
நிலவும் மலரும் சிரிப்பும் இருந்தது
அந்த முகத்தினிலே
பெரும் நெருப்பும் கொதிப்பும் புயலும் இருக்குது
இந்த முகத்தினிலே….
பெரும் நெருப்பும் கொதிப்பும் புயலும் இருக்குது
இந்த முகத்தினிலே….

பெண் : அன்பு கடமை தியாகம் இருந்தது
அந்த மனதினிலே
அன்பு கடமை தியாகம் இருந்தது
அந்த மனதினிலே
வெறும் ஆத்திரம் அவசரம் வேகம் இருக்குது
இந்த மனதினிலே…..
ஆத்திரம் அவசரம் வேகம் இருக்குது
இந்த மனதினிலே…….

ஆண் : அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்

பெண் : அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..

ஆண் : அச்சம் நாணம் மௌனம்
இதைத்தான் இதுவரை வளர்த்து வந்தாய்
அச்சம் நாணம் மௌனம்
இதைத்தான் இதுவரை வளர்த்து வந்தாய்
இந்த மெச்சும் அறிவும் பேச்சும்
இதுவரை எங்கே மறைத்து வந்தாய்
இந்த மெச்சும் அறிவும் பேச்சும்
இதுவரை எங்கே மறைத்து வந்தாய்

பெண் : காக்கும் இமையில் காயம் இருந்தால்
கண்கள் சிவக்காதா
ஆண் : ஆஹா
பெண் : காக்கும் இமையில் காயம் இருந்தால்
கண்கள் சிவக்காதா
தன் கணவன் பொறுமை இழந்திடும் போது
கவலை பிறக்காதா…..
கணவன் பொறுமை இழந்திடும் போது
கவலை பிறக்காதா….

ஆண் : அந்த முகமா இந்த முகம்
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்

பெண் : அந்த மனமா இந்த மனம்
இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here