Singers : P. Susheela and P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Anthi varum neraththilae
Anju vanna poo eduththu
Naalthorum ambu vidum manma
Unnai yaaraenum kandathundo manmatha raja
Female : Anthi varum neraththilae
Anju vanna poo eduththu
Naalthorum ambu vidum manma
Unnai yaaraenum kandathundo manmatha raja
Male : Muthu vanna maalaiyittu
Moga vanna selai katti
Muthu vanna maalaiyittu
Moga vanna selai katti
Therottam aadi varum devathai yaaro
Intha devathaikku pennazhagu radhiyennum pero
Male : Muthu vanna maalaiyittu
Moga vanna selai katti
Therottam aadi varum devathai yaaro
Intha devathaikku pennazhagu radhiyennum pero
Female : Kannirendil unnuvathum
Kayirendai pinnuvathu
Kannirendil unnuvathum
Kayirendai pinnuvathu
Enna kalai theriyavillai
Idhai palliyilum padikkavillai
Male : Inba veri kolluvathum
Eerudalgal thulluvathum
Inba veri kolluvathum
Eerudalgal thulluvathum
Enna sugam puriyavillai
Entha yaedum idhai vilakkavillai
Female : Paavai enthan ullam
Pothum pothumennum
Male : Bodhaiyerum kangal
Thevai thevaiyennum
Mouna mozhi kettaenadi
Adhil maaya valai paarthenadi
Female : Gangai mudi sangaranaar
Kaaman unai yaevi vittar
Mogamennum thuyar koduththaar
Muppuram pola unai eriththaar
Male : Aada vantha sangaranai
Aatti vaiththa manmathanai
Bhoomithanil azhipathundo
Nyanigalum jeyipathundo
Female : Yaagam yogam endru koorum yaavum ingu
Male : Kaamam mogam kandu maarum maarum Endru
Ethanaiyo saatchiyundu
Visuvaamithiranin kadhaiyundu
Female : Anthi varum neraththilae
Anju vanna poo eduththu
Naalthorum ambu vidum manma
Unnai yaaraenum kandathundo manmatha raja
Manmatha raja manmatha raja
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அந்தி வரும் நேரத்திலே
அஞ்சு வண்ண பூ எடுத்து
நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா
உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா…..
பெண் : அந்தி வரும் நேரத்திலே
அஞ்சு வண்ண பூ எடுத்து
நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா
உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா…..
ஆண் : முத்து வண்ண மாலையிட்டு
மோக வண்ண சேலைக் கட்டி
முத்து வண்ண மாலையிட்டு
மோக வண்ண சேலைக் கட்டி
தேராட்டம் ஆடி வரும் தேவதை யாரோ
இந்த தேவதைக்கு பெண்ணழகு ரதியென்னும் பேரோ….
ஆண் : முத்து வண்ண மாலையிட்டு
மோக வண்ண சேலைக் கட்டி
தேராட்டம் ஆடி வரும் தேவதை யாரோ
இந்த தேவதைக்கு பெண்ணழகு ரதியென்னும் பேரோ….
பெண் : கண்ணிரெண்டில் உண்ணுவதும்
கையிரெண்டை பின்னுவதும்
கண்ணிரெண்டில் உண்ணுவதும்
கையிரெண்டை பின்னுவதும்
என்ன கலை தெரியவில்லை
இதை பள்ளியிலும் படிக்கவில்லை
ஆண் : இன்ப வெறி கொள்ளுவதும்
ஈருடல்கள் துள்ளுவதும்
இன்ப வெறி கொள்ளுவதும்
ஈருடல்கள் துள்ளுவதும்
என்ன சுகம் புரியவில்லை
எந்த ஏடும் இதை விளக்கவில்லை
பெண் : பாவை எந்தன் உள்ளம்
போதும் போதுமென்னும்
ஆண் : போதையேறும் கண்கள்
தேவை தேவையென்னும்
மௌன மொழிக் கேட்டேனடி
அதில் மாய வலை பார்த்தேனடி…..
பெண் : கங்கை முடி சங்கரனார்
காமன் உனை ஏவி விட்டார்
மோகமெனும் துயர் கொடுத்தார்
முப்புரம் போல உனை எரித்தார்
ஆண் : ஆட வந்த சங்கரனை
ஆட்டி வைத்த மன்மதனை
பூமிதனில் அழிப்பதுண்டோ
ஞானிகளும் ஜெயிப்பதுண்டோ
பெண் : யாகம் யோகம் என்று கூறும் யாவும் இங்கு
ஆண் : காமம் மோகம் கண்டு மாறும் மாறும் என்று
எத்தனையோ சாட்சியுண்டு
விச்வாமித்ரனின் கதையுண்டு…..
பெண் : அந்தி வரும் நேரத்திலே
அஞ்சு வண்ண பூ எடுத்து
நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா உன்னை
யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா
மன்மத ராஜா மன்மத ராஜா