Singer : K. B. Sundarambal

Music by : R. Sudharsanam

Female : Needhiyae neeyum
Irukkindraayaa…
Illai neeyum andha kolai kalathil
Uyir vittaayaa…

Female : Andru kollum arasin aanai
Vendru vittadhu
Nindru kollum dheivam ingae
Vandhu vittadhu

Female : Andru kollum arasin aanai
Vendru vittadhu
Nindru kollum dheivam ingae
Vandhu vittadhu

Female : Kaaladi thaamarai novadhu marandhu
Kaadhalanodu nadandhaalae
Andha kaalamum thodarndhu nadandhadhai arindhu
Karpukkarasi thudithaalae
Adaiyaa kadhavaai imaiyaa vizhiyaai
Aayiram yugangal poruthaalae
Indru vilaiyaa nilathin vidhaiyaai pona
Vaedhanai arindhu thudithaalae

Female : Andru kollum arasin aanai
Vendru vittadhu
Nindru kollum dheivam ingae
Vandhu vittadhu

Female : Veyilae illaadha kaalathil kidaikkindra
Vaedhaa payanenna
Kenji vaendiya pozhudhu odhungiya needhi
Vandhenna poyenna…

Female : Uyirae pona pin udalenum koottukku
Uyarvenna thaazhvenna…

Female : Seiyaa pizhaikkae thalaiyadhu veezhndhaal
Seidhavan gadhi enna… seidhavan gadhi enna…
Pizhai seidhavan gadhi enna…

பாடகி : கே. பி. சுந்தராம்பாள்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பெண் : நீதியே நீயும் இருக்கின்றாயா…
இல்லை நீயும் அந்த கொலைக் களத்தில்
உயிர் விட்டாயா…

பெண் : அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது

பெண் : அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது

பெண் : காலடித் தாமரை நோவது மறந்து
காதலனோடு நடந்தாளே
அந்தக் காலமும் தொடர்ந்து நடந்ததை அறிந்து
கற்புக்கரசி துடித்தாளே
அடையாக் கதவாய் இமையா விழியாய்
ஆயிரம் யுகங்கள் பொறுத்தாளே
இன்று விளையா நிலத்தின் விதையாய்ப் போன
வேதனை அறிந்து துடித்தாளே

பெண் : அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது

பெண் : வெயிலே இல்லாத காலத்தில் கிடைக்கின்ற
வேதாத் பயனென்ன
கெஞ்சி வேண்டிய பொழுது ஒதுங்கிய நீதி
வந்தென்ன போயென்ன…

பெண் : உயிரே போன பின் உடலெனும் கூட்டுக்கு
உயர்வென்ன தாழ்வென்ன…
செய்யாப் பிழைக்கே தலையது வீழ்ந்தால்
செய்தவன் கதி என்ன… செய்தவன் கதி என்ன…
பிழை செய்தவன் கதி என்ன…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here