Singers : P. Susheela and K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Anna ..aaa…
Female : Kannaa..aa…
Both : Ho oo hoo oo oo oo
Hmm mm hmm mm mm

Female : Anna anna sugam thaana
Un aasai nenjam nalam thaana
Anna anna sugam thaana
Un aasai nenjam nalam thaana

Female : Kanna kanna nalam thaana
Un kaadhal ullam sugam thaana
Kanna kanna nalam thaana
Un kaadhal ullam sugam thaana

Female : Thannanthaniyae thaayum naanum
Thavipathai arindhae vandhaaiyoo

Female : Anna kodiyaal amaidhi illaamal
Thudipathai arindhae vandhaaiyoo

Female : Manavarai kolam maraiyum munnalae
Maraindhu sendraayae yen anna
Manavarai kolam maraiyum munnalae
Maraindhu sendraayae yen anna

Female : Thaniyarai kaana kaathirundhenae
Thavikka vittayae yen kanna
Thaniyarai kaana kaathirundhenae
Thavikka vittayae yen kanna

Female : Anna ..aaa…
Female : Kannaa..aa…

Female : Anna anna sugam thaana
Female : Kanna kanna nalam thaana

Female : Pakkuvamaana paasathai kannil
Veithirukkindren vaa anna
Female : Mukkaniyodu sakkarai pandhal
Pottirukkindren vaa kanna

Female : Thottil mudhalaai thodarndhu vandhaval
Naan thaanae naan thaanae
Thottil mudhalaai thodarndhu vandhaval
Naan thaanae naan thaanae

Female : Kattil variyum varugira kanni
Naan thaanae naan thaanae
Kattil variyum varugira kanni
Naan thaanae naan thaanae

Female : Anna anna sugam thaana
Un aasai nenjam nalam thaana

Female : En kanna kanna nalam thaana
Un kaadhal ullam sugam thaana

Female : Anna ..aaa…
Female : Kannaa..aa…
Both : Ho oo hoo oo oo oo
Hmm mm hmm mm mm

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அண்ணா ..ஆஅ ..
பெண் : கண்ணா ..ஆஅ…
இருவர் : முனங்கல் ……….

பெண் : அண்ணா அண்ணா சுகம்தானா
உன் ஆசை நெஞ்சம் நலம் தானா
அண்ணா அண்ணா சுகம்தானா
உன் ஆசை நெஞ்சம் நலம் தானா

பெண் : கண்ணா கண்ணா நலம் தானா
உன் காதல் உள்ளம் சுகம் தானா
கண்ணா கண்ணா நலம் தானா
உன் காதல் உள்ளம் சுகம் தானா

பெண் : தன்னந்தனியே தாயும் நானும்
தவிப்பதை அறிந்தே வந்தாயோ

பெண் : அன்னக் கொடியாள் அமைதியில்லாமல்
துடிப்பதை அறிந்தே வந்தாயோ

பெண் : மணவறைக் கோலம் மறையும் முன்னாலே
மறைந்து சென்றாயே ஏன் அண்ணா
மணவறைக் கோலம் மறையும் முன்னாலே
மறைந்து சென்றாயே ஏன் அண்ணா

பெண் : தனியறை காணக் காத்திருந்தேனே
தவிக்க விட்டாயே ஏன் கண்ணா
தனியறை காணக் காத்திருந்தேனே
தவிக்க விட்டாயே ஏன் கண்ணா

பெண் : அண்ணா ..ஆஅ ..
பெண் : கண்ணா ..ஆஅ…

பெண் : அண்ணா அண்ணா சுகம்தானா
பெண் : கண்ணா கண்ணா நலம் தானா

பெண் : பக்குவமான பாசத்தைக் கண்ணில்
வைத்திருக்கின்றேன் வா அண்ணா

பெண் : முக்கனியோடு சக்கரைப் பந்தல்
போட்டிருக்கின்றேன் வா கண்ணா

பெண் : தொட்டில் முதலாய் தொடர்ந்து வந்தவள்
நான்தானே………நான்தானே…….
தொட்டில் முதலாய் தொடர்ந்து வந்தவள்
நான்தானே………நான்தானே………

பெண் : கட்டில் வரையும் வருகின்ற கன்னி
நான்தானே………நான்தானே………
கட்டில் வரையும் வருகின்ற கன்னி
நான்தானே………நான்தானே………

பெண் : அண்ணா அண்ணா சுகம்தானா
உன் ஆசை நெஞ்சம் நலம் தானா
பெண் : கண்ணா கண்ணா நலம் தானா
உன் காதல் உள்ளம் சுகம் தானா

பெண் : அண்ணா ..ஆஅ ..
பெண் : கண்ணா ..ஆஅ…
இருவர் : முனங்கல் ……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here