Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kumaradevan

Male : Annal gandhiyin vazhiyinilae
Vaikkam veerar thanthai periyaar nadanthaar
Thanthai periyaar paguththarivaal
Engal tamilmagan annaa valarnthaar

Male : Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Naadum veedum nalam kaana
Naalaiya thalaimurai sugam kaana
Annaa…..annaa…..enagal annaa……

Male : Yaezhai sirippinil iraivanai kaanbom
Enbathu nee sonna bodhanai
Yezhaigal sirikkum nilai varyum munnae
Maranthathuthaan perum sodhanai

Male : Eppothu nee pirappaai
Engal thuyaram thanippaai
Sendra idamthaan engae
Endru varuvaai ingae

Male : Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum

Male : Yaesuvin porumai budhanin karunai
Inainthathae vaazhnthathu unnidam
Igazhnthavar thammai vaazhnthidum ullam
Inimaen kaanbathu yaaridam

Male : Vaanaththai manathaal alanthaai
Vaazhvukku vazhiyaai nadanthaai
Naan enum ninaivai maruththaai
Naam enum uravai valarththaai

Male : Annaa meendum vara vendum
Anaivarum sirikum nilai vendum
Naadum veedum nalam kaana
Naalaiya thalaimurai sugam kaana
Annaa…..annaa…..enagal annaa……

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : குமாரதேவன்

ஆண் : அண்ணல் காந்தியின் வழியினிலே
வைக்கம் வீரர் தந்தை பெரியார் நடந்தார்
தந்தை பெரியார் பகுத்தறிவால்
எங்கள் தமிழ்மகன் அண்ணா வளர்ந்தார்…….

ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
நாடும் வீடும் நலம் காண
நாளையத் தலைமுறை சுகம் காண
அண்ணா………அண்ணா……..எங்கள் அண்ணா…..

ஆண் : ஏழை சிரிப்பினில் இறைவனைக் காண்போம்
என்பது நீ சொன்ன போதனை
ஏழைகள் சிரிக்கும் நிலை வரும் முன்னே
மறைந்ததுதான் பெரும் சோதனை

ஆண் : எப்போது நீ பிறப்பாய்
எங்கள் துயரம் தணிப்பாய்
சென்ற இடம்தான் எங்கே
என்று வருவாய் இங்கே……….

ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

ஆண் : இயேசுவின் பொறுமை புத்தனின் கருணை
இணைந்தே வாழ்ந்தது உன்னிடம்
இகழ்ந்தவர் தம்மை வாழ்த்திடும் உள்ளம்
இனிமேல் காண்பது யாரிடம்

ஆண் : வானத்தை மனதால் அளந்தாய்
வாழ்வுக்கு வழியாய் நடந்தாய்
நான் எனும் நினைவை மறுத்தாய்
நாம் எனும் உறவை வளர்த்தாய்……..

ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும்
அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்
நாடும் வீடும் நலம் காண
நாளையத் தலைமுறை சுகம் காண
அண்ணா………அண்ணா……..எங்கள் அண்ணா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here