Singer : A. P. Komala

Music by : C. N. Pandurangan

Female : Annaiyae annaiyae annaiyae
Arul thaarum maeri thaayae
Annaiyae arulthaarum maeri thaayae

Female : Oon vinaiyadhaalae naanae
Ullam udaindhu nondhen
Oon vinaiyadhaalae naanae
Ullam udaindhu nondhen
Paazhum samoogam ennum
Balipeedam thannil veezhndhen

Female : Kalaisaer nilaavai maraithidum
Kaarmegam pola jaadhi
Kalaisaer nilaavai maraithidum
Kaarmegam pola jaadhi
Malaipol en vaazhvil thadaiyaai
Vandhu nindradhae yen seiven

Female : Annaiyae annaiyae annaiyae
Arul thaarum maeri thaayae
Annaiyae annaiyae annaiyae

Female : Aan thunaiyillaadha pengal
Adaivaarae thunbam enpol
Aan thunaiyillaadha pengal
Adaivaarae thunbam enpol
Vaan meedhulaavum kilipol
Maghizhvaaga vaazha ninaithaen

Female : Paaindhodum aattril odam
Padum paattai pola aanen
Paaindhodum aattril odam
Padum paattai pola aanen
Thooya en kaadhal kanavo
Thuyar neengumo en vaazhvil

Female : Annaiyae annaiyae annaiyae
Arul thaarum maeri thaayae
Annaiyae annaiyae annaiyae

பாடகி : ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பெண் : அன்னையே அன்னையே அன்னையே
அருள் தாரும் மேரி தாயே
அன்னையே அருள்தாரும் மேரி தாயே

பெண் : ஊன் வினையதாலே நானே
உள்ளம் உடைந்து நொந்தேன்
ஊன் வினையதாலே நானே
உள்ளம் உடைந்து நொந்தேன்
பாழும் சமூகம் என்னும்
பழிபீடம் தன்னில் வீழ்ந்தேன்

பெண் : கலைசேர் நிலாவை மறைத்திடும்
கார்மேகம் போல ஜாதி
கலைசேர் நிலாவை மறைத்திடும்
கார்மேகம் போல ஜாதி
மலைபோல் என் வாழ்வில் தடையாய்
வந்து நின்றதே என் செய்வேன்

பெண் : அன்னையே அன்னையே அன்னையே
அருள் தாரும் மேரி தாயே
அன்னையே அன்னையே அன்னையே

பெண் : ஆண் துணையில்லாத பெண்கள்
அடைவாரே துன்பம் என்போல்
ஆண் துணையில்லாத பெண்கள்
அடைவாரே துன்பம் என்போல்
வான் மீதுலாவும் கிளிபோல்
மகிழ்வாக வாழ நினைத்தேன்

பெண் : பாய்ந்தோடும் ஆற்றில் ஓடம்
படும் பாட்டைப் போல ஆனேன்
பாய்ந்தோடும் ஆற்றில் ஓடம்
படும் பாட்டைப் போல ஆனேன்
தூய என் காதல் கனவோ
துயர் நீங்குமோ என் வாழ்வில்

பெண் : அன்னையே அன்னையே அன்னையே
அருள் தாரும் மேரி தாயே
அன்னையே அன்னையே அன்னையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here