இசை அமைப்பாளர் : ஐஸ் நவ்பால் ராஜா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பெண் : அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் : அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் : வாய்க்காக் கரையோரம்
வயித்தவலி வந்திருச்சா?
பயந்து நடுங்கையிலே
பாவாடை நனஞ்சிருச்சா?
பெண் : பிஞ்சு பழுத்திருச்சே
பெருந்துன்பம் வந்திருச்சே
நெல்லறுக்கப் போகையிலே
வெள்ளெருக்குப் பூத்திருச்சே
பெண் : அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் : பாவாட சட்டையே
பரமசிவன் கொடுத்த வரம்
சக்களத்தி மகளே நான்
தாவணிக்கு என்னபண்ண?
பெண் : பாவாட சட்டையே
பரமசிவன் கொடுத்த வரம்
சக்களத்தி மகளே நான்
தாவணிக்கு என்னபண்ண?
பெண் : தாவணி வேணுமின்னா
தாய்மாமன் வரவேணும்
தாய்மாமன் வரணுமின்னா
ஜாமீனில் வரவேணும்
பெண் : அப்பன் வெறுங்கூடு
ஆத்தா கருவாடு
இந்தவொரு லட்சணத்தில்
ஏண்டியம்மா குத்தவச்ச?
பெண் : அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் : ஆளாகி நின்னவள
ஆடுமேய்க்கச் சொன்னாக்கா
அப்பன் தடுப்பாக
அடுத்தவுக மொறப்பாக
பெண் : ஆளாகி நின்னவள
ஆடுமேய்க்கச் சொன்னாக்கா
அப்பன் தடுப்பாக
அடுத்தவுக மொறப்பாக
பெண் : ராத்திரிக்கு ராத்திரியே
ரகசியமாத் தலமுழுகி
நாளைக்கே ஆடோட்டு
யாருக்குந் தெரியாது
ஆண் : ஆடுமேய்க்கப் போகையிலே
அங்கங்கே நில்லாதே
அடியேஓஞ் சங்கதிய
ஆட்டுக்குஞ் சொல்லாதே
அடியேஓஞ் சங்கதிய
ஆட்டுக்குஞ் சொல்லாதே
பெண் : அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?
பெண் : வாய்க்காக் கரையோரம்
வயித்தவலி வந்திருச்சா?
பயந்து நடுங்கையிலே
பாவாடை நனஞ்சிருச்சா?
பெண் : பிஞ்சு பழுத்திருச்சே
பெருந்துன்பம் வந்திருச்சே
நெல்லறுக்கப் போகையிலே
வெள்ளெருக்குப் பூத்திருச்சே
பெண் : அன்னம்மா பெத்தவளே
ஆடுமேய்க்கப் போனவளே
அந்தி மசங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன?