Singers : Madhu Balakrishnan, Hemambika and Anitha Karthikeyan
Music by : Ilayaraja
Male Chorus : Ae thannae thannae thaanae thannae
Thaanae thannae thaanae
Ae thannae thannae thaanae thannae
Thaanae thannae thaanae
Ae thannae thannae thaanae thannae
Thaanae thannae thaanae
Ae thannae thannae thaanae thannae
Thaanae thannae thaanae
Male : Ae poonjaranga saram saramaa
Manjalum maavilaiyoda
Ae ponnaru sangaru poosaikkaaga
Ponnaalil onnu kooda
Female Chorus : Ae thannae thannae thaanae thannae
Thaanae thannae thaanae
Ae thannae thannae thaanae thannae
Thaanae thannae thaanae
Female Chorus : Haei kaanja mannil
Peinja mazhaiyil kaanja karutha aruthu
Heyy vaangadi adi pondugalaaa
Ponga vechu padaippom
Female Chorus : Ae thannae thannae thaanae thannae
Thaanae thannae thaanae
Ae thannae thannae thaanae thannae
Thaanae thannae thaanae
Male : Annammaaru kadhaiya solla poren
Annan thambimaarae
Male : Annammaaru kadhaiya solla poren
Annan thambimaarae
Male Chorus : Annammaaru kadhaiya solla porom
Annan thambimaarae
Male : Solla kaekkum punniyam
Vandhu saerum solluradha kaelaen
Male : Solla kaekkum punniyam
Vandhu saerum solluradha kaelaen
Male : Katti vittu chonna kattu kadhaiyum illa
Namma mannil nadandhadhu sathiyam poiyum illa
Nenju nimindhu nillu
Annammaarae kumbittu koodi nillu
Male Chorus : Nenju nimindhu nillu
Annammaarae kumbittu koodi nillu
Male & Chorus : Annammaaru kadhaiya solla porom
Annan thambimaarae
Solla kaekkum punniyam
Vandhu saerum solluradha kaelaen
Female Chorus : Thangam velaiyira boomiyil porandha
Thaamara naachikku thaali katta
Namma thaamara naachikku thaali katta
Thaai maaman thala maranjirukka
Mandha ragamaana buthi konda andha
Maandhiyappan katta naal kurichaan
Ketta maandhiyappan katta naal kurichaan
Female Chorus : Thaali kattum naalil maaru vaedathula
Thaai maamanum thannai kaattidavae
Thaai maamanum thannai kaattidavae
Thannai yemaatthina thaai thandhaiyar mela
Thaamara naachiyum kobam kondaa
Thaamara naachiyum kobam kondaa aa… aa…
Kattunaa maamana thaan kattuven
Illaenaa kattaiyila poganumnaa
Male : Thaai maaman kattuna thaaliyum
Male Chorus : Thaamara naachi kazhuthula yerichaiyaa
Male : Maandhiyappanodu appanukkum
Avamaanathaal madhi kettu ponadhaiyaa
Theeraadha pagai onnu moondadhaiyaa
Male Chorus : Theeraadha pagai onnu moondadhaiyaa
Andha pazhi theerkka
Sadhi koottam saerndhadhaiyaa
Male : Annammaaru kadhaiya solla poren
Annan thambimaarae
Solla kaekkum punniyam
Vandhu saerum solluradha kaelaen
Male : Thaamara naachiyin vaarisu thaan
Andha thangamala naatta aalumunnu
Saadhagatha kuri poosaari solla
Paadhagam senjida kaathirukku
Female Chorus : Dheivamae kan thorandhu
Dhikkillaadha dheena sanangala kaappadharkku
Thingala pola thendralap pola
Thaanae porandhida manaserangi
Thaai madi koyilil garba giragathil
Nalla naalil kudi kondadhammaa
Male : Pulla valarum saedhiyumae
Andha pollaarukkum poyi saendhadhammaa
Female : Thaamara naachikku
Female Chorus : Thanga vala kaappu thanga vala kaappu
Female : Poova pola ponnukku
Female Chorus : Ponnu vala kaappu ponnu vala kaappu
Female : Ororu maadhamum
Female Chorus : Or naala pol poga or naala pol poga
Female : Odi odi pathu maadham
Female Chorus : Aagi ponadhammaa aagi ponadhammaa
Male : Paadhagar koottam ellaam
Pazhi vaanga onnu saerndhu
Paavi andha poosaari paazhaana thittam solla
Paeru kaalam paakka pona
Paeyaana paechiyidam
Pacha elam kurutha pinju pera nelava
Porakkum podhae kolla cholli
Pon koduthu poga chonnaan
Male : Pulla azhudha satham
Boomi ellaam kaettadhammaa
Kallatthanamaa vandha
Kiraadhagiya kandaarammaa
Porandhadho onnu illa retta kozhandha aiyaa
Maranju thaan ponadhae maayamaa annadhae
Ennaachu yaedhaachu
Yaarkkum adhu theriyalaiyae
Usurodu irukkudho illa ozhinju thaan ponadho
Yaaru solluvaa unma yaaru solluvaa
Saedhi nalladhaa chellaandi amman sollanum
Andha chellaandi amman sollanum
Female : Aaan… pacha elanguruthae…
Paal nelavae panneerae…
Pavala mani malligaiyae
Pasungiliyae pani malarae
Poovaana thottil idhu
Em madiyil nee orangu
Aaraaro aariraro aaraaro aariraro…
பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன், ஹெமாம்பிகா மற்றும்
அனிதா கார்த்திக்கேயன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் குழு : ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஆண் : ஏ பூஞ்சரங்க சரம் சரமா
மஞ்சளும் மாவிலையோட
ஏ பொன்னரு சங்கரு பூசைக்காக
பொன்னாளில் ஒண்ணு கூட
பெண் குழு : ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
பெண் குழு : ஹேய் காஞ்ச மண்ணில்
பேய்ஞ்ச மழையில் காஞ்ச கருத அறுத்து
ஹேய்ய் வாங்கடியோ பொண்டுகளா
பொங்க வெச்சு படைப்போம்
பெண் குழு : ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஆண் : அண்ணம்மாரு கதைய சொல்லப் போறேன்
அண்ணன் தம்பிமாரே
ஆண் : அண்ணம்மாரு கதைய சொல்லப் போறேன்
அண்ணன் தம்பிமாரே
ஆண் குழு : அண்ணம்மாரு கதைய சொல்லப் போறோம்
அண்ணன் தம்பிமாரே
ஆண் : சொல்லக் கேக்கும் புண்ணியம்
வந்து சேரும் சொல்லுறதக் கேளேன்
ஆண் : சொல்லக் கேக்கும் புண்ணியம்
வந்து சேரும் சொல்லுறதக் கேளேன்
ஆண் : கட்டி விட்டுச் சொன்ன கட்டுக் கதையும் இல்ல
நம்ம மண்ணில் நடந்தது சத்தியம் பொய்யும் இல்ல
நெஞ்சு நிமிந்து நில்லு
அண்ணம்மாரே கும்பிட்டு கூடி நில்லு
ஆண் குழு : நெஞ்சு நிமிந்து நில்லு
அண்ணம்மாரே கும்பிட்டு கூடி நில்லு
ஆண் மற்றும் குழு :
அண்ணம்மாரு கதைய சொல்லப் போறோம்
அண்ணன் தம்பிமாரே
சொல்லக் கேக்கும் புண்ணியம்
வந்து சேரும் சொல்லுறதக் கேளேன்
பெண் குழு : தங்கம் வெளையிற பூமியில் பொறந்த
தாமர நாச்சிக்கு தாலி கட்ட
நம்ம தாமர நாச்சிக்கு தாலி கட்ட
தாய் மாமன் தல மறஞ்சிருக்க
மந்த ரகமான புத்தி கொண்ட அந்த
மாந்தியப்பன் கட்ட நாள் குறிச்சான்
கெட்ட மாந்தியப்பன் கட்ட நாள் குறிச்சான்
பெண் குழு : தாலி கட்டும் நாளில் மாறு வேடத்துல
தாய் மாமனும் தன்னைக் காட்டிடவே
தாய் மாமனும் தன்னைக் காட்டிடவே
தன்னை ஏமாத்தின தாய் தந்தையர் மேல
தாமர நாச்சியும் கோபம் கொண்டா
தாமர நாச்சியும் கோபம் கொண்டா ஆ… ஆ…
கட்டுனா மாமனத் தான் கட்டுவேன்
இல்லேனா கட்டையில போகணும்னா
ஆண் : தாய் மாமன் கட்டுன தாலியும்
ஆண் குழு : தாமர நாச்சி கழுத்துல ஏறிச்சய்யா
ஆண் : மாந்தியப்பனோடு அப்பனுக்கும்
அவமானத்தால் மதி கெட்டுப் போனதய்யா
தீராத பகை ஒண்ணு மூண்டதய்யா
ஆண் குழு : தீராத பகை ஒண்ணு மூண்டதய்யா
அந்த பழி தீர்க்க
சதி கூட்டம் சேர்ந்ததய்யா
ஆண் : அண்ணம்மாரு கதைய சொல்லப் போறேன்
அண்ணன் தம்பிமாரே
சொல்லக் கேக்கும் புண்ணியம்
வந்து சேரும் சொல்லுறதக் கேளேன்
ஆண் : தாமர நாச்சியின் வாரிசுதான்
அந்த தங்கமல நாட்ட ஆளுமுன்னு
சாதகத்துக் குறி பூசாரி சொல்ல
பாதகம் செஞ்சிடக் காத்திருக்கு
பெண் குழு : தெய்வமே கண் தொறந்து
திக்கில்லாத தீன சனங்கள காப்பதற்கு
திங்களப் போல தென்றலப் போல
தானே பொறந்திட மனசெறங்கி
தாய் மடி கோயிலில் கர்ப கிரகத்தில்
நல்ல நாளில் குடி கொண்டதம்மா
ஆண் : புள்ள வளரும் சேதியுமே அந்த
பொல்லாருக்கும் போயிச் சேந்ததம்மா
பெண் : தாமர நாச்சிக்கு
பெண் குழு : தங்க வள காப்பு தங்க வள காப்பு
பெண் : பூவப் போல் பொண்ணுக்கு
பெண் குழு : பொன்னு வள காப்பு பொன்னு வள காப்பு
பெண் : ஓரோரு மாதமும்
பெண் குழு : ஓர் நாளப் போல் போக ஓர் நாளப் போல் போக
பெண் : ஓடி ஓடி பத்து மாதம்
பெண் குழு : ஆகிப் போனதம்மா ஆகிப் போனதம்மா
ஆண் : பாதகர் கூட்டம் எல்லாம்
பழி வாங்க ஒண்ணு சேந்து
பாவி அந்த பூசாரி பாழான திட்டம் சொல்ல
பேறு காலம் பாக்கப் போன
பேயான பேச்சியிடம்
பச்ச எளங்குருத்த பிஞ்சு பெற நெலவ
பொறக்கும் போதே கொல்லச் சொல்லி
பொன் கொடுத்து போகச் சொன்னான்
ஆண் : புள்ள அழுத சத்தம்
பூமி எல்லாம் கேட்டதம்மா
கள்ளத்தனமா வந்த கிராதகிய கண்டாரம்மா
பொறந்ததோ ஒண்ணு இல்ல
ரெட்டக் கொழந்த அய்யா
மறஞ்சு தான் போனதே மாயமா ஆனதே
என்னாச்சு ஏதாச்சு
யார்க்கும் அது தெரியலையே
உசுரோடு இருக்குதோ
இல்ல ஒழிஞ்சு தான் போனதோ
யாரு சொல்லுவா உண்ம யாரு சொல்லுவா
சேதி நல்லதா செல்லாண்டி அம்மன் சொல்லணும்
அந்தச் செல்லாண்டி அம்மன் சொல்லணும்
பெண் : ஆன்…….பச்ச எளங்குருத்தே…
பால் நெலவே பன்னீரே…
பவள மணி மல்லிகையே
பசுங்கிளியே பனி மலரே
பூவான தொட்டில் இது
எம் மடியில் நீ ஒறங்கு
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ…